மதிப்பீட்டுச் செயல்பாடு
1. மரபுத் தொடர் உணர்த்தும் பொருளை வட்டமிடுக.
கானல் நீர் – ஏமாற்று வேலை, கிடைக்காத ஒன்று
கரையேறுதல் – துன்பத்திலிருந்து மீளுதல், ஆற்றிலிருந்து ஏறுதல்
கை கழுவுதல் – வேலை போய்விட்டது, விட்டுவிடுதல்
குரங்குப்பிடி – உறுதியாகப் பற்றுதல், கைப்பிடி
2. தேர்ந்தெடுத்து நிரப்புக.
1.தொழிலில் பேராசையின் காரணமாக அகல கால் வைத்தான் .
(அகல / நீண்ட )
2. தலைவரை மக்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
(தலையில் வைத்து / கையில் வைத்து)
3. மாணவர்கள் நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கைக் கடலில் கரையேறுவார்கள்.
(கரையேறுவார்கள் / ஓடுவார்கள்)
3. பொருத்துக.
அ. பஞ்சாகப் பறத்தல் - விடாப்பிடி
ஆ. கரையேறுதல் - இல்லாத ஒன்று
இ. ஆகாயத்தாமரை - அலைந்து திரிதல்
ஈ. குரங்குப்பிடி - துன்பத்திலிருந்து மீளுதல்
பஞ்சாகப்பறத்தல் - அலைந்து திரிதல்
கரையேறுதல் - துன்பத்திலிருந்து மீளுதல்
ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
குரங்குப்பிடி - விடாப்பிடி
4. கொடுக்கப்பட்டுள்ள மரபுத் தொடர்களைக் கொண்டு சொற்றொடர் அமைக்க.
அ. பசுமரத்தாணி
ஆசிரியர் கற்பித்த இலக்கணம் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்தது.
ஆ. மலையேறிவிட்டது
மாட்டுவண்டிப் பயணம் தற்போது மலையேறிவிட்டது.
இ. கல்மேல் எழுத்து
நான் கற்ற வாய்பாடு கல்மேல்எழுத்து போல் என் மனதில் உள்ளது.
ஈ. பச்சைக் கொடி
நான் மேற்படிப்பு கற்க என் தந்தை பச்சைக்கொடி காட்டினார்.
உ. ஈரமனசு
அன்னைதெரசாவிற்கு ஈரமனசு இருந்தது.