கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 08, 2022

காவற்பெண்டு ஆசிரியர் குறிப்பு - kavarpendu

 காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். 

இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 86 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

  • துறை - ஏறாண்முல்லை

ஆண்சிங்கம் போலப் போராடும் ஆண்மகனின் சிறப்பினைக் கூறுவது ஏறாண்முல்லை.

பாடல்

'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

பாடல் சொல்லும் செய்தி

    போருக்கு அரசன் அழைப்பு வந்துள்ளது. காவற்பெண்டு குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தாள். ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அவளது வீட்டுத் தூணைப் பற்றி நின்றுகொண்டு உன் மகன் எங்கே என்று காவற்பெண்டைக் கேட்டான். அப்போது அவள் சொல்கிறாள்.

என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. 

அவனைப் பெற்ற வயிறு இதோ இங்கு இருக்கிறது. 

(இது மறக்குடி மகனைப் பெற்றெடுத்த வயிறு) அவன் கட்டாயம் போர்களத்துக்குத் தானே வந்து நிற்பான். (நீ செல்)

கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆசிரியர் குறிப்பு KADIYALUR URUTHIRANKANNANAR

 கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். 

இவர் பாடிய  பெரும்பாணாற்றுப்படை,  

பட்டினப்பாலை  ஆகிய இருபாட்டுகளும்  

பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுகளின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. 

இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். 

பெயர்க் காரணம்

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. 

இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.

  • காஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.
  • சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.
  • இப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.

எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. 

ஆயினும் பெயரைக் கொண்டு நோக்கின் தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு. 

இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர்.

ராஜமார்த்தாண்டன் ஆசிரியர் குறிப்பு - KAVIGNAR RAJA MARTHANDAN


 

பெயர் - ராஜமார்த்தாண்டன்

பிறப்பு - 1948

ஊர் - பொற்றையடி - கன்னியாகுமரி மாவட்டம்

ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராகப் பணியாற்றியவர்; 

கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். 

தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில்  பணியாற்றினார்.

இவர் எழுதிய "ராஜமார்த்தாண்டன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இவரது நூல்கள்

  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 
  • என் கவிதை
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் 
  • கொங்குதேர் வாழ்க்கை
  • கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு
  • கொங்குதேர் வாழ்க்கை - 3 
  • புதுக்கவிதை வரலாறு 
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும் 


இறப்பு - 06-06-2009

சுரதா - சுப்புரத்தினதாசன் இராசகோபாலன் ஆசிரியர் குறிப்பு - SURATHA SUBBU RATHINA THASAN


 

பெயர் - சுரதா

இயற்பெயர் - இராசகோபாலன்

பிறப்பு - 23-11-1921

ஊர் - பழையனூர் - தஞ்சாவூர் மாவட்டம்

தந்தை திருவேங்கடம்

தாய் - செண்பகம்

மனைவி - சுலோச்சனா

மகன் - கல்லாடன்

சிறப்புப் பெயர் - உவமைக்கவிஞர்

கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். 

தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக  சுரதா  என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். 

செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.

இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

 சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

சுரதாவின் படைப்புகள்

  • தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
  • துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  • சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
  • சிக்கனம்
  • சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  • அமுதும் தேனும், 1983
  • பாரதிதாசன் பரம்பரை 
  • வினாக்களும் சுரதாவின் விடைகளும்
  • நெய்தல் நீர்
  • உதட்டில் உதடு
  • எச்சில் இரவு
  • எப்போதும் இருப்பவர்கள்
  • கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  • சாவின் முத்தம்
  • சிறந்த சொற்பொழிவுகள்
  • சுரதா கவிதைகள் 
  • சுவரும் சுண்ணாம்பும்
  • சொன்னார்கள்
  • தமிழ்ச் சொல்லாக்கம்
  • தொடாத வாலிபம்
  • நெஞ்சில் நிறுத்துங்கள்
  • பட்டத்தரசி
  • பாவேந்தரின் காளமேகம்
  • புகழ்மாலை
  • மங்கையர்க்கரசி
  • முன்னும் பின்னும்
  • வார்த்தை வாசல்
  • வெட்ட வெளிச்சம்

இறப்பு - 20-06-2006

11ஆம் வகுப்பு தமிழ் அரசு 2022 பொதுத்தேர்வு விடைக்குறிப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு pdf 11th tamil govt public exam answer key +1

பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, June 02, 2022

உடுமலை நாராயண கவி ஆசிரியர் குறிப்பு - UDUMALAI NARAYANA KAVI

 


பிறப்பு - 25-09-1899

ஊர் - பூவிளைவாடி - திருப்பூர் மாவட்டம்

தந்தை கிருஷ்ணசாமி

தாய் - முத்தம்மாள்

மனைவி - பேச்சியம்மாள்

சிறப்புப் பெயர் - பகுத்தறிவுக் கவிராயர்

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 

'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல்துறை  அஞ்சல்தலை  வெளியிட்டுள்ளது.

இறப்பு - 23-5-1981

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் ஆசிரியர் குறிப்பு - NAMAKKAL KAVIGNAR V. RAMALINGANAR

 





பிறப்பு - 19-10-1888

ஊர் - மோகனூர் - நாமக்கல் மாவட்டம்

தந்தை வெங்கடராமன்

தாய் - அம்மணிஅம்மாள்

மனைவி - முத்தம்மாள், சௌந்தரம்மாள்

சிறப்புப் பெயர் - காந்தியக் கவிஞர்

எழுதிய நூல்கள்

இசை நாவல்கள் - 3

கட்டுரைகள் - 12

தமிழ்மொழியும் தமிழரசும்
தமிழ்த்தேன்
இசைத்தமிழ்
கவிஞன் குரல்
தாயார் கொடுத்த தனம்
காந்திய அரசியல்

தன் வரலாறு

என்கதை (சுயசரிதம்)

வாழ்க்கை வரலாறு

தேசபக்தர் மூவர்

புதினங்கள் - 5

கற்பகவல்லி
காதல் திருமணம்
காணாமல் போன கல்யாணப் பெண்
மரகதவல்லி
மலைக்கள்ளன்

இலக்கியத் திறனாய்வுகள் - 7

கம்பனும் வால்மீகியும்
கம்பன் கவிதை இன்பக் குவியல்
திருக்குறளும் பரிமேலழகரும்
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
வள்ளுவரின் உள்ளம்

கவிதைத் தொகுப்புகள் - 10

கவிதாஞ்சலி 
பிரார்த்தனை
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
சங்கொலி
காந்தி அஞ்சலி
கீர்த்தனைகள்

சிறுகாப்பியங்கள் - 5

அவனும் அவளும்

சிறுகதைகள்

சங்கிலிக்குறவன்

மொழிபெயர்ப்புகள் - 4

உரை

திருக்குறள் கருத்துரை
திருக்குறள் புது உரை

நாடகம்

மாமன் மகள் (நாடகம்)
அரவணை சுந்தரம் (நாடகம்)

புகழ்பெற்ற மேற்கோள்கள்

  • 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
  • தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
  • 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
  • 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்


இறப்பு - 24-08-1972

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் 10th tamil unit 6 book inside one word

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 பலவுள் தெரிக 1 மதிப்பெண் வினாக்கள் pdf 10th tamil unit 6 book inside one word questions

 பதிவிறக்கு/DOWNLOAD


விடைகள்/ANSWERS

Wednesday, June 01, 2022

மு.மேத்தா ஆசிரியர் குறிப்பு - MU.METHA



 பெயர்     மு.மேத்தா

இயற்பெயர்     முகமது மேத்தா

பிறப்பு    05 - 09 - 1945

ஊர்     பெரியகுளம்

மனைவி சையது ராபியா என்ற மல்லிகா

இயற்றிய நூல்கள் 

கவிதை நூல்கள்

  1. கண்ணீர்பூக்கள் (1974)
  2. ஊர்வலம் (1977)
  3. மனச்சிறகு (1978)
  4. அவர்கள்வருகிறார்கள் (1980)
  5. முகத்துக்கு முகம் (1981)
  6. நடந்தநாடகங்கள் (1982)
  7. காத்திருந்த காற்று (1982)
  8. ஒரு வானம் இரு சிறகு (1983)
  9. திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
  10. நந்தவனநாட்கள் (1985)
  11. இதயத்தில் நாற்காலி (1985)
  12. என்னுடையபோதிமரங்கள் (1987)
  13. கனவுக்குதிரைகள் (1992)
  14. கம்பன் கவியரங்கில் (1993)
  15. என் பிள்ளைத் தமிழ் (1994)
  16. ஒற்றைத் தீக்குச்சி (1997)
  17. மனிதனைத்தேடி (1998)
  18. ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
  19. மு.மேத்தா கவிதைகள் (2007)
  20. கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
  21. கனவுகளின்கையெழுத்து (2016)
  22. நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)

கட்டுரை நூல்

  1. திறந்த புத்தகம்

நாவல்கள்

  1. சோழ நிலா
  2. மகுடநிலா

சிறுகதை தொகுப்புகள்

  • கிழித்த கோடு
  • மு.மேத்தா சிறுகதைகள்
  • பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

பரிசுகளும் விருதுகளும்

  • "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
  • "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது

குணங்குடி மஸ்தான் சாகிபு ஆசிரியர் குறிப்பு - KUNANKUDI MASTHAN SAHIBU

 

பெயர்     குணங்குடி மஸ்தான் சாகிபு

இயற்பெயர்     சுல்தான் அப்துல் காதிர்

பிறப்பு    1792

ஊர்     குணங்குடி

மாவட்டம்     இராமநாதபுரம்

இயற்றிய நூல்கள் எக்காளக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி.


மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு


இறப்பு    1838

திருமூலர் ஆசிரியர் குறிப்பு - THIRUMOOLAR

 


திருமூலர் அல்லது திருமூல நாயனார்  சேக்கிழார்   சுவாமிகளால்  புகழ்ந்து பேசப்பட்ட  அறுபத்து மூன்று  நாயன்மார்களில்  ஒருவரும்,    பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். 

இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்.

 திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். 

இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தயது. 

எனினும் இவரால் அருளப்பட்ட  திருமந்திரமாலை  பல  காலத்திற்குப் பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் கி.பி என்று கூறுகின்றனர்

இது 3000 பாடல்களைக் கொண்டது

இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

மீரா ஆசிரியர் குறிப்பு - MEERA

 

பிறப்பு - 1938

ஊர் - சிவகங்கை

பெயர் மீரா

இயற்பெயர் - மீ.ராசேந்திரன்

படைப்புகள்

திறனாய்வு

  1. மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு

கவிதை

  1. மீ.இராசேந்திரன் கவிதைகள்
  2. மூன்றும் ஆறும்
  3. மன்னர் நினைவில்
  4. கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
  5. ஊசிகள்
  6. கோடையும் வசந்தமும்
  7. குக்கூ

கட்டுரைகள்

  1. வா இந்தப் பக்கம்
  2. எதிர்காலத் தமிழ்க்கவிதை
  3. மீரா கட்டுரைகள்

கலந்துரையாடல்

  1. கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்

தொகுத்தவை

  1. தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
  2. பாரதியம் (கவிதைகள்)
  3. பாரதியம் (கட்டுரைகள்)
  4. சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)

நடத்திய இதழ்கள்

  1. அன்னம் விடு தூது
  2. கவி

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
  • பாவேந்தர் விருது
  • சிற்பி இலக்கிய விருது
  • தமிழ்ச் சான்றோர் பேரவை விருது

செயங்கொண்டார் ஆசிரியர் குறிப்பு - JEYANKONDAR

 செயங்கொண்டார் என்னும் புலவர் பிற்கால சோழர் கால இலக்கியமான  கலிங்கத்துப்பரணியைப்  பாடியவர். 

முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். 

இவர் தீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். 

இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம். 

முதன்முதலில் பரணி பாடியவர் இவரே. 

இவரது வரலாறு அறியப்படவில்லை. 

இவரது காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

பிற்காலப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

 சமகாலத்தவரான ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.

புகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து இசை ஆயிரம் என்ற நூலையும் பாடியுள்ளார். 

அத்துடன் விழுப்பரையர் மீது உலாமடல் என்னும் நூலையும் பாடியுள்ளார்

நல்லந்துவனார் ஆசிரியர் குறிப்பு - NALLANTHUVANAR

 நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 

அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. 

அவை

அகநானூறு 43 – பாடல் 1
கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33
நற்றிணை 88 –பாடல் 1
பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல்-விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. 

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள்-சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன.

 அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன.

 இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை.

 பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். 

உவமைகள் புதுமையானவை. 

சுந்தரர் ஆசிரியர் குறிப்பு - SUNDARAR

 

பெயர் - சுந்தரர்

இயற்பெயர் - நம்பியாரூரன்

காலம் - எட்டாம் நூற்றாண்டு

ஊர் - திருநாவலூர் - திருமுனைப்பாடி நாடு

தந்தை சடையனார்

தாய் - இசைஞானியார்

மனைவிகள் - பரவையார், சங்கிலியார்


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.


சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர்.

 இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம். 

இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். 

இவை பண்களோடு அமைந்துள்ளன. 

அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். 

இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன.

 அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.

 தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. 

தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. 

இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

திரு.வி.கல்யாண சுந்தரனார் ஆசிரியர் குறிப்பு - THIRU.VI.KALYANA SUNDARANAR

 


பிறப்பு - 26-08-1883

ஊர் - தண்டலம் - காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை - விருத்தாசலம்

தாய் - சின்னம்மா

மனைவி - கமலாம்பிகை

திருமணம் - 1912

பணி - ஆசிரியர்

எழுதிய நூல்கள்

வாழ்க்கை வரலாறுகள்

  • யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
  • நாயன்மார் வரலாறு - 1937
  • முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
  • உள்ளொளி - 1942
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
  • உரை நூல்கள்
  • பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
  • பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
  • காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
  • திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
  • திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல் நூல்கள்

  • தேசபக்தாமிர்தம் - 1919
  • என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
  • தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
  • தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
  • சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930.
  • தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
  • தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
  • இந்தியாவும் விடுதலையும் - 1940
  • தமிழ்க்கலை - 1953

சமய நூல்கள்

  • சைவசமய சாரம் - 1921
  • நாயன்மார் திறம் - 1922
  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
  • சைவத்தின் சமசரசம் - 1925
  • முருகன் அல்லது அழகு - 1925
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
  • தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
  • சைவத் திறவு - 1929
  • நினைப்பவர் மனம் - 1930
  • இமயமலை (அல்லது) தியானம் - 1931
  • சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
  • சமரச தீபம் - 1934
  • சித்தமார்க்கம் - 1935
  • ஆலமும் அமுதமும் - 1944
  • பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

பாடல்கள்

  • முருகன் அருள் வேட்டல் - 1932
  • திருமால் அருள் வேட்டல் - 1938
  • பொதுமை வேட்டல் - 1942
  • கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
  • புதுமை வேட்டல் - 1945
  • சிவனருள் வேட்டல் - 1947
  • கிறிஸ்து மொழிக்குறள் - 1948
  • இருளில் ஒளி - 1950
  • இருமையும் ஒருமையும் - 1950
  • அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
  • பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
  • சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
  • முதுமை உளறல் - 1951
  • வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
  • இன்பவாழ்வு - 1925

பயண இலக்கிய நூல்

  • இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)

இறப்பு - 17-09-1953

ஆலங்குடி சோமு ஆசிரியர் குறிப்பு - ALANGUDI SOMU

 

 பெயர் - ஆலங்குடி சோமு

ஊர் ஆலங்குடி - சிவகங்கை.


பிறந்த தேதி - 12 -12 -1932

பணி - கவிஞர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்.

பெற்ற விருது - கலைமாமணி

1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 

1960 இல் வெளிவந்த  யானைப்பாகன்  திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

இறந்த தேதி - 06 -06 -1997

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு 2022 பொதுத்தேர்வு விடைக்குறிப்பு pdf 10th tamil govt public exam answer key

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive