பெயர் - சுரதா
இயற்பெயர் - இராசகோபாலன்
பிறப்பு - 23-11-1921
ஊர் - பழையனூர் - தஞ்சாவூர் மாவட்டம்
தந்தை - திருவேங்கடம்
தாய் - செண்பகம்
மனைவி - சுலோச்சனா
மகன் - கல்லாடன்
சிறப்புப் பெயர் - உவமைக்கவிஞர்
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.
இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
சுரதாவின் படைப்புகள்
- தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
- துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
- சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
- சிக்கனம்
- சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
- அமுதும் தேனும், 1983
- பாரதிதாசன் பரம்பரை
- வினாக்களும் சுரதாவின் விடைகளும்
- நெய்தல் நீர்
- உதட்டில் உதடு
- எச்சில் இரவு
- எப்போதும் இருப்பவர்கள்
- கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
- சாவின் முத்தம்
- சிறந்த சொற்பொழிவுகள்
- சுரதா கவிதைகள்
- சுவரும் சுண்ணாம்பும்
- சொன்னார்கள்
- தமிழ்ச் சொல்லாக்கம்
- தொடாத வாலிபம்
- நெஞ்சில் நிறுத்துங்கள்
- பட்டத்தரசி
- பாவேந்தரின் காளமேகம்
- புகழ்மாலை
- மங்கையர்க்கரசி
- முன்னும் பின்னும்
- வார்த்தை வாசல்
- வெட்ட வெளிச்சம்