கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, June 01, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காலக்கணிதம், புயலிலே ஒரு தோணி.

10th tamil model notes of lesson

lesson plan 2025 june 9

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-06-2025 முதல் 13-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை, விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

காலக்கணிதம், புயலிலே ஒரு தோணி.

6.பக்கஎண்

8 - 12

7.கற்றல் விளைவுகள்

T-1003 கதை நிகழ்வுகளுக்குள் பொதிந்திருக்கும் மொழி வீச்சையும் நயத்தையும் செறிவையும் படித்துச் சுவைத்தல், எண்ணங்களோடு இணைத்து விவரித்து எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்.

இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.

9.நுண்திறன்கள்

கவிஞன் பற்றி கண்ணதாசன் கூறும் தத்துவக் கருத்துகளைப் படித்து வெளிப்படுத்துதல்.

புதினத்தில் காற்று குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/05/kaalakanitham-song.html

https://tamilthugal.blogspot.com/2019/05/kalakanitham.html

https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-kaalakanitham.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_16.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_68.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_84.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_63.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_29.html

11.ஆயத்தப்படுத்துதல்

          தத்துவம் குறித்துக் கேட்டல்.

          மாணவர்கள் அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கவிஞர் கண்ணதாசனை அறிமுகம் செய்தல்.

ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கவிஞர்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அறம் குறித்து மாணவர்கள் அறிதல். புதுக்கவிதை வடிவங்களை அறிதல். காலத்தை வென்ற கவிஞர்கள் குறித்து உணர்தல்.

          கப்பித்தான், தொங்கான், அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல். புயலில் தோணி  பட்ட பாட்டை விவரித்தல். அடுக்குத்தொடர், ஒலிக்குறிப்புச் சொல், வருணனைகள் குறித்து விளக்குதல். மாணவர்களின் பயண அனுபவங்களைக் கேட்டல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கண்ணதாசன்  குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.

புயல் சீற்றங்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       கண்ணதாசனின் இயற்பெயர் ...............

ந.சி.வி – புயலிலே ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

கவிதைகள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழோவியம், ஆறாம் திணை

9th tamil model notes of lesson

lesson plan 2025 june 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-06-2025 முதல் 13-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதென்று பேர் – கவிதைப்பேழை, விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழோவியம், ஆறாம் திணை

6.பக்கஎண்

10 - 15

7.கற்றல் விளைவுகள்

T-9002 வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்.

T-9003 தமிழ் மொழியில் பதிவாகி உள்ள புலம்பெயர் தமிழர்களின் எழுத்துப் போக்கினையும் கருத்தினையும் படித்தல்.

T-9004 கடிதம், கட்டுரை வாயிலாகக் கருத்துகளை வெளிப்படுத்துதல்.

8.திறன்கள்

தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகளை அறிதல்.

தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களின் அவலத்தை அறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழின் பெருமைகள் குறித்து அறிதல்.

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/07/blog-post.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamiloviyam.html

https://tamilthugal.blogspot.com/2021/07/9th-tamil-seyyul-thamiloviyam.html

https://tamilthugal.blogspot.com/2025/06/1_1.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த அயலகத் தமிழர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஈரோடு தமிழன்பன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

முத்துலிங்கம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழோவியம், தாய்மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். தமிழன்பன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          ஆறாம் திணை பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          அயலகத் தமிழரின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தாய்நாட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

புலம்பெயர் தமிழர்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       அயலகத் தமிழர் நாள் ............................

          ந.சி.வி – காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

உ.சி.வி –      தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

புலம்பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          தமிழின் பெருமைகளைத் தொகுத்தல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஆறாம் திணை கற்பித்தல் துணைக்கருவி

 9th tamil unit 1 aaram thinai teaching aid




எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆழிக்கு இணை ஜூன் 8

8th tamil model notes of lesson

lesson plan 2026 june 8


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ் இன்பம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஆழிக்கு இணை

6.பக்கஎண்

5 - 7

7.கற்றல் விளைவுகள்

T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

8.கற்றல் நோக்கங்கள்

இரட்டுறமொழிதலின் சுவையறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாடுதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/06/1.html 

https://tamilthugal.blogspot.com/2024/06/1_37.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_82.html 

11.ஆயத்தப்படுத்துதல்

இருபொருள் தரும் சொற்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.       

12.அறிமுகம்

சிலேடை நயத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழுக்கும் கடலுக்கும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குதல். காளமேகப்புலவர் குறித்தும் தமிழழகனார் குறித்தும் கூறுதல்.

இரட்டுறமொழிதல் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஆழி என்பதன் பொருள் ..........................

          ந.சி.வி – இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?

உ.சி.வி      தமிழுக்கும்  கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.

17.தொடர்பணி

நீங்கள் படித்தவற்றுள் இடம்பெற்ற இரட்டுறமொழிதலை எழுதுக.


எட்டாம் வகுப்பு இயல் 1 ஆழிக்கு இணை மன வரைபடம்

 8th mind map alikku inai




ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒன்றல்ல இரண்டல்ல ஜூன் 8

7th tamil model notes of lesson

lesson plan 2026 june 8

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதத் தமிழ் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஒன்றல்ல இரண்டல்ல

6.பக்கஎண்

5 - 7

7.கற்றல் விளைவுகள்

T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்.

8.திறன்கள்

          பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறியும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்கள் என்பதை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/7-7th-tamil-worksheer-with-pdf-ondralla.html 

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1_11.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-ondralla-irandalla.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_6.html 

https://tamilthugal.blogspot.com/2022/06/udumalai-narayana-kavi.html 

https://tamilthugal.blogspot.com/2023/02/kadaiyelu-vallalgal.html 

https://tamilthugal.blogspot.com/2020/06/kadaiyezhu-vallalgal-tamil-kings.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          அறிந்த வள்ளல்கள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          அறிந்த இலக்கியங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தமிழின் பெருமையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தென்றலில் தேன் மணம், கனி, பொன் போன்ற தானியங்கள் வளமிக்கது. பரணி, பரிபாடல், கலம்பகம், எட்டுத்தொகை, திருக்குறள், அகம், புறம் பாடிய சங்க இலக்கியங்கள். முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் பாரி, புலவருக்குத் தலை தரத் துணிந்த குமண வள்ளல் போன்றோர் பலராவர் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் இலக்கியங்களையும் வள்ளல்ளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் வள்ளல்களை மாணவர்கள் அறியச் செய்தல்.

          தமிழின் இலக்கியச் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?

                   பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

          ந.சி.வி –       எட்டுத்தொகை நூல்களை எழுதுக.

                   பொருள் கூறுக.

                   முகில், உபகாரி, அற்புதம்.

உ.சி.வி –      தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          நாராயணகவி பற்றிய குறிப்புகளை அறிதல்.

          தமிழின் இலக்கிய வடிவங்களைத் தொகுத்தல்.


ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளர்தமிழ் ஜூன் 8

 6th tamil model notes of lesson

lesson plan 2026 june 8

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ்த்தேன் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

வளர்தமிழ்

6.பக்கஎண்

5-10

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

          தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/valar-tamil-6th-tamil-prose.html 

https://tamilthugal.blogspot.com/2018/06/valartamil.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-valar-tamil-term-1.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/tamil-numbers-live-worksheet.html 

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_21.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          பூவின் பருவ நிலைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மாணவர்கள் அறிந்த தமிழ் எண்களை எழுதச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மொழிகள், செம்மொழிகள், பாரதியார் பாடல்வரி, தொல்காப்பியம், வலஞ்சுழி எழுத்துகள், அல்திணை, பாகுஅல்காய், இலக்கிய, இலக்கண வளம், ஒரு சொல் பல பொருள், முத்தமிழ், கணினித் தமிழ் புதிய கலைச்சொற்கள்- இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இணையத் தமிழ் குறித்த செய்திகளை எழுதி வரச் செய்தல்.

          கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – மா என்னும் சொல்லின் பொருள் ....................

          ந.சி.வி –       தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

உ.சி.வி –      தமிழ்மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          மாணவர்களின் வயதைத் தமிழ் எண்களில் எழுதி வரச் செய்தல்.

          திறன்பேசியில் உள்ள செயலிகளுக்குத் தமிழ்ச்சொல் அறிந்து வரல்.

வகுப்பு 10 தமிழ் இயல் 7 அக்கறை வினாடிவினா 10 வினாக்கள் Tenth Tamil Quiz AKKARAI kalyanji 10 mark


Tenth Tamil Quiz AKKARAI  kalyanji 10 mark 

வகுப்பு 10 தமிழ் இயல் 7 தேம்பாவணி வினாடிவினா 30 வினாக்கள் Tenth Tamil Quiz thembavani 30 one marks


Tenth Tamil Quiz thembavani 30 one marks

பத்தாம் வகுப்பு தமிழ் ஜுன் மாத வார பாடத்திட்டம் 2025 tenth tamil june weekly monthly syllabus

வகுப்பு 10 தமிழ் இயல் 7 சங்க இலக்கியத்தில் அறம் வினாடிவினா 30 வினாக்கள்


Tenth Tamil Quiz sanga ilakkiyathil aram 30 marks

வகுப்பு 10 தமிழ் இயல் 6 புறப்பொருள் இலக்கணம் வினாடிவினா 25 வினாக்கள் Tenth Tamil Quiz puraporul


Tenth Tamil Quiz puraporul

வகுப்பு 10 தமிழ் இயல் 6 மங்கையராய்ப் பிறப்பதற்கே வினாடிவினா 30 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark mangaiyaray pirappatharke


Tenth Tamil Quiz 1 mark mangaiyaray pirappatharke

திருக்குறள் 150 அறன்வரையான்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - aranvarai


 thirukural Explanation tamil & english - aranvarai

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

தமிழ்த்துகள்

Blog Archive