7th tamil model notes of lesson
lesson plan 2025 june 9
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
09-06-2025 முதல் 13-06-2025
2.பருவம்
1
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதத் தமிழ் –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஒன்றல்ல இரண்டல்ல
6.பக்கஎண்
5 - 7
7.கற்றல் விளைவுகள்
T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம்
பாராட்டுதல்.
8.திறன்கள்
பழந்தமிழகத்தில்
வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறியும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
தமிழ்மொழி இலக்கிய
வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன்
மிக்கவர்கள் என்பதை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/07/7-7th-tamil-worksheer-with-pdf-ondralla.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1_11.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-ondralla-irandalla.html
https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_6.html
https://tamilthugal.blogspot.com/2022/06/udumalai-narayana-kavi.html
https://tamilthugal.blogspot.com/2023/02/kadaiyelu-vallalgal.html
https://tamilthugal.blogspot.com/2020/06/kadaiyezhu-vallalgal-tamil-kings.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிந்த வள்ளல்கள்
குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
அறிந்த இலக்கியங்களை மாணவர்களைக் கூறச்
செய்தல்.
12.அறிமுகம்
தமிழின் பெருமையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தென்றலில் தேன்
மணம், கனி, பொன் போன்ற தானியங்கள் வளமிக்கது. பரணி, பரிபாடல், கலம்பகம்,
எட்டுத்தொகை, திருக்குறள், அகம், புறம் பாடிய சங்க இலக்கியங்கள். முல்லைக்குத்
தேர் தந்த வள்ளல் பாரி, புலவருக்குத் தலை தரத் துணிந்த குமண வள்ளல் போன்றோர்
பலராவர் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின் இலக்கியங்களையும் வள்ளல்ளையும்
மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ் வள்ளல்களை
மாணவர்கள் அறியச் செய்தல்.
தமிழின் இலக்கியச் சிறப்புகளை அறிந்து
வரல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – தமிழ்நாட்டின்
இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?
பகுத்தறிவுக் கவிராயர் என
அழைக்கப்படுபவர் யார்?
ந.சி.வி – எட்டுத்தொகை
நூல்களை எழுதுக.
பொருள் கூறுக.
முகில், உபகாரி, அற்புதம்.
உ.சி.வி – தமிழில் அற இலக்கியங்கள்
மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நாராயணகவி பற்றிய
குறிப்புகளை அறிதல்.
தமிழின் இலக்கிய வடிவங்களைத் தொகுத்தல்.


