கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, June 01, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளர்தமிழ் ஜூன் 8

 6th tamil model notes of lesson

lesson plan 2026 june 8

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ்த்தேன் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

வளர்தமிழ்

6.பக்கஎண்

5-10

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

          தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/valar-tamil-6th-tamil-prose.html 

https://tamilthugal.blogspot.com/2018/06/valartamil.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-valar-tamil-term-1.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/tamil-numbers-live-worksheet.html 

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_21.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          பூவின் பருவ நிலைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மாணவர்கள் அறிந்த தமிழ் எண்களை எழுதச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மொழிகள், செம்மொழிகள், பாரதியார் பாடல்வரி, தொல்காப்பியம், வலஞ்சுழி எழுத்துகள், அல்திணை, பாகுஅல்காய், இலக்கிய, இலக்கண வளம், ஒரு சொல் பல பொருள், முத்தமிழ், கணினித் தமிழ் புதிய கலைச்சொற்கள்- இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இணையத் தமிழ் குறித்த செய்திகளை எழுதி வரச் செய்தல்.

          கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – மா என்னும் சொல்லின் பொருள் ....................

          ந.சி.வி –       தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

உ.சி.வி –      தமிழ்மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          மாணவர்களின் வயதைத் தமிழ் எண்களில் எழுதி வரச் செய்தல்.

          திறன்பேசியில் உள்ள செயலிகளுக்குத் தமிழ்ச்சொல் அறிந்து வரல்.

தமிழ்த்துகள்

Blog Archive