தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, July 31, 2021
Friday, July 30, 2021
Thursday, July 29, 2021
Wednesday, July 28, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 சிறுவினா விடை 10th TAMIL UNIT 5 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
சிறுவினா 3 மதிப்பெண்கள்
1.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது
ஏன்?
விளக்கம் தருக.
•
பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும்
மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.
•
கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய
கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை
அவமதித்தான்.
•
மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.
•
மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை
விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.
•
இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை
வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.
•
இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.
2.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப்
பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன்
இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
•
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்".
•
விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது கல்வி.
•
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது
பழமொழி.
•
குடும்பச் சூழ்நிலை கருதி கற்றலை நிறுத்துவது சரியல்ல.
•
அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தி நாம் படிப்பைத் தொடர
வேண்டும்.
•
விடுமுறை நாள்களில் ஏதேனும் பிற வேலைகள் செய்து குடும்பச்
செலவுக்காகப் பொருள் ஈட்டலாம்.
•
போட்டி மிகுந்த இவ்வுலகில் நம் எதிர்கால வாழ்வு சிறக்கக்
கல்வி அவசியம்.
•
எனவே பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் செல்வது
முறை அல்ல.
•
என்னால் இயன்ற உதவியை நானும் என் தந்தையிடம் கேட்டு
உனக்குச் செய்கிறேன்.
•
இவ்வாறு என்
நண்பனிடம் கூறி, பள்ளிக்கு வந்து கல்வியைத் தொடரச்
செய்வேன்.
3.ஐநா அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து
கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை
மொழிபெயர்ப்பது. ஆனால், ஒருவர் பேசும் போதே மொழிபெயர்ப்பது 'விளக்குவது' என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில்
ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி
வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் கேட்டபடி சில
நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்
தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து
கொள்வார்.
இப்பகுதியில்
இருந்து 5 வினாக்களை உருவாக்குக
1) மொழி பெயர்ப்புக்கும் விளக்குவதற்கும் உள்ள வேறுபாடு
யாது?
2) அனைத்து நாட்டு உறுப்பினர்களும் இடம்பெறும் ஐ.நா.
அவையில் ஒருவர் பேசுவதை ஒருவர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்?
3) ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?
4) மொழிபெயர்ப்பாளர் கூறுவதைப் பார்வையாளர்கள் ---------
மூலம் கேட்டு அவரவர் மொழியில் புரிந்து கொள்ள முடியும்.
அ) ஒலிபெருக்கி
ஆ) ஒலிவாங்கி
இ) கணினி
ஈ) காதணி கேட்பி
5) ஐ.நா. அவையில்
மொழிபெயர்ப்பாளர் அமர்ந்திருக்கும் இடம் ........
அ) முன்வரிசையில்
ஆ) பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில்
இ) பின்வரிசையில்
ஈ) தனி மேடையில்
4.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி
விளக்குக.
பொருள்கோள் வகை – ஆற்றுநீர்ப் பொருள்கோள்
மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே – நன்னூல்.
மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின்
நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.
எனவே, இவ்வாறு வருவது ஆற்றுநீர்ப்
பொருள்கோளாகும்.
கல்வித்தொலைக்காட்சி ஆறாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூலை மாதம் 6th TAMIL KALVI TV DATE AND HEADING JULY
05-07-2021 காணிநிலம் 1
12-07-2021 காணிநிலம் 2
19-07-2021 தமிழ்க்கும்மி
26-07-2021 திருக்குறள் - இயல் 2
கல்வித்தொலைக்காட்சி ஆறாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூன் மாதம் 6th TAMIL KALVI TV DATE AND HEADING JUNE
21-06-2021 தமிழ்க்கும்மி 1
28-06-2021 தமிழ்க்கும்மி 2
கல்வித்தொலைக்காட்சி ஏழாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூலை மாதம் 7th TAMIL KALVI TV DATE AND HEADING JULY
05-07-2021 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
12-07-2021 சொலவடைகள்
19-07-2021 குற்றியலுகரம், குற்றியலிகரம்
26-07-2021 குற்றியலுகரம், குற்றியலிகரம்
கல்வித்தொலைக்காட்சி ஏழாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூன் மாதம் 7th TAMIL KALVI TV DATE AND HEADING JUNE
21-06-2021 ஒன்றல்ல இரண்டல்ல 1
28-06-2021 ஒன்றல்ல இரண்டல்ல 2
கல்வித்தொலைக்காட்சி எட்டாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூலை மாதம் 8th TAMIL KALVI TV DATE AND HEADING JULY
01-07-2021 கோணக்காத்துப்பாட்டு 1
02-07-2021 கோணக்காத்துப்பாட்டு 2
05-07-2021 வினைமுற்று
06-07-2021 திருக்குறள் 1
07-07-2021 திருக்குறள் 2
08-07-2021 நோயும் மருந்தும்
09-07-2021 வருமுன் காப்போம்
12-07-2021 தமிழர் மருத்துவம்
13-07-2021 எச்சம்
14-07-2021 கல்வி அழகே அழகு
15-07-2021 புத்தியைத் தீட்டு
16-07-2021 ஆன்ற குடிப்பிறத்தல்
19-07-2021 வேற்றுமை
20-07-2021 திருக்கேதாரம்
22-07-2021 பாடறிந்து ஒழுகுதல்
23-07-2021 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
26-07-2021 தமிழ்மொழி வாழ்த்து
27-07-2021 தமிழ்மொழி மரபு
28-07-2021 தமிழ் வரிவடிவ வளர்ச்சி
29-07-2021 சொற்பூங்கா
30-07-2021 எழுத்துகளின் பிறப்பு
கல்வித்தொலைக்காட்சி எட்டாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூன் மாதம் 8th TAMIL KALVI TV DATE AND HEADING JUNE
21-06-2021 தமிழ்மொழி வாழ்த்து
22-06-2021 தமிழ்மொழி மரபு
23-06-2021 தமிழ் வரி வடிவ வளர்ச்சி 1
24-06-2021 சொற்பூங்கா
25-06-2021 எழுத்துகளின் பிறப்பு
28-06-2021 தமிழ் வரி வடிவ வளர்ச்சி 2
29-06-2021 ஓரெழுத்து ஒரு மொழி
30-06-2021 ஓடை
கல்வித்தொலைக்காட்சி ஒன்பதாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூலை மாதம் 9th TAMIL KALVI TV DATE AND HEADING JULY
01-07-2021 நீரின்றி அமையாது உலகு 1
02-07-2021 நீரின்றி அமையாது உலகு 2
05-07-2021 பட்டமரம்
06-07-2021 பெரிய புராணம் 1
07-07-2021 பெரிய புராணம் 2
08-07-2021 புறநானூறு 1
09-07-2021 புறநானூறு 2
12-07-2021 தண்ணீர்
13-07-2021 துணை வினைகள்
14-07-2021 ஏறு தழுவுதல்
15-07-2021 மணிமேகலை 1
16-07-2021 மணிமேகலை 2
19-07-2021 அகழாய்வுகள்
20-07-2021 வல்லினம் மிகும் இடங்கள்
22-07-2021 திருக்குறள் 1
23-07-2021 திருக்குறள் 2
26-07-2021 திருக்குறள் 3
27-07-2021 இயந்திரங்களும் இணைய வழிப் பயன்பாடும் 1
28-07-2021 இயந்திரங்களும் இணைய வழிப் பயன்பாடும் 2
29-07-2021 வல்லினம் மிகா இடங்கள்
30-07-2021 திராவிட மொழிக்குடும்பம்
கல்வித்தொலைக்காட்சி ஒன்பதாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூன் மாதம் 9th TAMIL KALVI TV DATE AND HEADING JUNE
21-06-2021 திராவிட மொழிக்குடும்பம் 1
22-06-2021 திராவிட மொழிக்குடும்பம் 2
23-06-2021 தமிழோவியம்
24-06-2021 தமிழ் விடு தூது
25-06-2021 வளரும் செல்வம்
28-06-2021 தொடர் இலக்கணம் 1
29-06-2021 தொடர் இலக்கணம் 2
30-06-2021 தொடர் இலக்கணம் 3
கல்வித்தொலைக்காட்சி பத்தாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூலை மாதம் 10th TAMIL KALVI TV DATE AND HEADING JULY
01-07-2021 காற்றே வா
02-07-2021 புயலிலே ஒரு தோணி
05-07-2021 முல்லைப்பாட்டு
06-07-2021 விருந்து போற்றுதும்
07-07-2021 மலைபடுகடாம்
08-07-2021 கோபல்லபுரத்து மக்கள் 1
09-07-2021 தொகாநிலைத் தொடர்கள் 1
12-07-2021 கோபல்லபுரத்து மக்கள் 2
13-07-2021 தொகாநிலைத் தொடர்கள் 2
14-07-2021 திருக்குறள் 1
15-07-2021 திருக்குறள் 2
16-07-2021 திருக்குறள் 3
19-07-2021 திருக்குறள் 4
கல்வித்தொலைக்காட்சி பத்தாம் வகுப்பு தமிழ் நாளும் பாடத்தலைப்பும் ஜூன் மாதம் 10th TAMIL KALVI TV DATE AND HEADING JUNE
21-06-2021 அன்னை மொழியே 1
22-06-2021 தமிழ்ச்சொல் வளம்
23-06-2021 இரட்டுறமொழிதல்
24-06-2021 தொகைநிலைத் தொடர்கள்
25-06-2021 எழுத்து, சொல்
26-06-2021 அன்னைமொழியே 2
28-06-2021 கேட்கிறதா என் குரல் 1
29-06-2021 கேட்கிறதா என் குரல் 2
30-06-2021 கேட்கிறதா என் குரல் 3
Tuesday, July 27, 2021
Monday, July 26, 2021
Sunday, July 25, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 சிறுவினா விடை 10th TAMIL UNIT 4 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
1.மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள
உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள
உவமை சுட்டும் செய்தி –
v
வாளால் அறுத்துச் சுடினும் ... எனும் பாடல்
பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடியது.
v
இப்பாடலில் இடம்பெற்ற வரியே மேற்கூறியது.
v
உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர்தம் கத்தியால்
அறுத்துச்சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
v
அடித்தாலும் அன்னையின் கை பிடித்து அழும்
குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும்
துன்பமும் நன்மைக்கே எனக் கருதி இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார்
கூறியுள்ளார்.
2.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை
மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
• மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்யக் கணினிக் கரங்கள்
நீள்கின்றன.
• கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதை பாடும்
எந்திரங்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள்
எனப் புதிது புதிதான வழிகளில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்றன இன்றைய அறிவியல்
கண்டுபிடிப்புகள்.
• கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து தேவைப்படும் வேலையில்
வெளிப்படுத்துவதில் இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறி உள்ளது.
• அதேவேளையில் மனிதனைச் சோம்பேறி ஆக்கவும் மூளையின் சிந்தனைத் திறனுக்கு ஓய்வு
கொடுப்பது போலவும் இதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளுக்கு நம் சந்ததியினர்
பாதிப்பதாகவும் உணர்ந்தால், இன்னும் சற்றுக்
கவனத்தோடு நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கையாள வேண்டும் என்றே தோன்றுகிறது.
3.மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு
கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம்
மேம்படுத்தப்படுகிறது.
இதனால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி
அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத்
தொழில்நுட்பம்‘ என்ற தலைப்பில் எழுதுக.
எதிர்காலத் தொழில்நுட்பம்
• அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது கண்காணிப்புக் கருவி; போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதைச் சுட்டிக்காட்டி
சுருக்கமான வழி சொல்கிறது திறன்பேசி. கண் அறுவை மருத்துவம், சதுரங்கம் விளையாடுதல், அழகான கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்குதல், ஊடகங்களில் தேடுபொறிகளில் தேடி கிடைக்கும் விடைகள், வாடிக்கையாளர்களுடன் உரையாடும் 'இலா' மென்பொருள் என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கிவிட்டது செயற்கை
நுண்ணறிவு.
• ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும்
பெற்றோர்கள்; வயதானவர்களுக்கு உதவியாய்
தோழனாய் பணியாளாய் ரோபோக்கள், ஊர்திகளை
விபத்துகள் இன்றி இயக்கவும் விடுதிகள், வங்கிகள், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், சிறுவர் பூங்காக்கள் இவற்றிலெல்லாம் உரையாடவும்
விளையாடவும் ரோபோக்கள், என எதிர்காலம் செயற்கை
நுண்ணறிவு கொண்ட ரோபோக்களின் பிடியில்.
• கல்வி அறிவுடன் மின்னணுக் கல்வி அறிவையும் மின்னணுச்
சந்தைப்படுத்துதலையும் அறிந்திருந்தால்
மட்டுமே எதிர்காலத்தில் வாழ்க்கையையும் வணிகத்தையும் நடத்த முடியும். மனிதனின்
கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றிலும் நன்மையும் தீமையும் இருக்கத்தான் செய்கின்றன.
அதற்கேற்ப மனிதர்கள் தங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
4.நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை
நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்”
என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம்
”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி
தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு
எழுதுக.
நிறைத்திருந்தது |
நிறைந்திருந்தது |
வாழைத்தோப்பில் |
வாழைத்தோட்டத்தில் |
குட்டியுடன் நின்றிருந்த மாடு |
கன்று |
இலச்சுமி கூப்பிடுகிறாள் |
மாடு கத்துகிறது |
இதோ சென்றுவிட்டேன் |
இதோ செல்கிறேன் |
துள்ளிய குட்டியை |
துள்ளிய கன்றை |
என்னடா விளையாட வேண்டுமா |
என்ன |
அவனை அவிழ்த்துவிட்டேன் |
அதனை |
நீயும் இவனும் விளையாடுங்கள் |
இதுவும் |
நீரைக் குடித்தாள் |
குடித்தது |
Saturday, July 24, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 திருக்குறள் சிறுவினா விடை 10th TAMIL UNIT 3 THIRUKURAL SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
1.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு
- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
• இக்குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.
• உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வந்து
இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.
• உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன்
அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது.
• உவமை - வேல் போன்ற ஆயுதத்தைக் காட்டி வழிப்பறி செய்வது.
• உவமஉருபு - போலும்
• ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக்
கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு
நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
2.கவிதையைத் தொடர்க.
• தண்ணீர் நிறைந்த குளம்
• தவித்தபடி வெளிநீட்டும் கை
• கரையில் கைபேசி படமெடுத்தபடி
• கவலையின்றி பலர்
• மனிதர்களை மறந்து
• மனித நேயம் குறைந்து.
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 சிறுவினா விடை 10th TAMIL UNIT 3 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
- ’கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!’ – இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
காலையில் நீ எழும்பு - வேற்றுமைத்
தொகாநிலைத்தொடர்
மாமழை பெய்கையிலே - உரிச்சொற்றொடர்
மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத்தொடர்
ஆடி ஆடி - அடுக்குத்தொடர்
ஓய்ந்துறங்கு - வினையெச்சத்தொடர்
2. முல்லை நிலத்திலிருந்தும் மருத
நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
முல்லை நிலத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்கள்
வரகு, சாமை, பால் மற்றும் பால் பொருள்கள்.
"வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்"-என்று தம்
தனிப்பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.
மருத நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப்
பொருள்கள்
செந்நெல், வெண்ணெல்
இளையான்குடி மாற நாயனாரின் வீட்டுக்கு வந்த
சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து
வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
3.புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின்
முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும்
புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த
கருத்துகளை எழுதுக
• கோவில்களிலும் மடாலயங்களிலும் அக்காலத்தில் உணவு
வழங்கப்பட்டது. இக்காலத்தில் அரசே கோவில்களில் 'அன்னதானத் திட்டம்' செயல்படுத்தி வருகிறது.
• அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்தம் குடும்பத்திலுள்ளோர்
பிறந்த நாளுக்கு ஏழை எளியோருக்கு உணவு உடை வழங்கும் விழா எடுக்கப்பட்டது. இன்றோ பல
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவை ஆற்றி வருகின்றன.
• உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அழைத்து
திருவிழாக்களில் கலந்து கொள்ளச் செய்வதோடு அவர்களுக்கு விருந்து படைப்பது இன்றும்
தொடர்கிறது.
4.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை
எவ்வாறு காட்டுகிறது?
• எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச்
சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்! சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய
பொருத்தமான பாதையில் செல்லுங்கள்! மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில்
சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்! மானமும் வெற்றியும் உடைய நன்னனின்
கூத்தர்கள் என்று சொல்லுங்கள் .
• அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய
வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!
• அவர்கள் இன்சொல்
கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.
• உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள்", என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்
படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
July
(146)
- மொழி முதல், இறுதி எழுத்துகள் ஆறாம் வகுப்பு தமிழ் இ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத அலகுத்தேர்வு வினாத்த...
- வழக்கு ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம் பருவம் 1 இயல் ...
- எச்சம் இயல் 3 எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வினாவ...
- வினைமுற்று எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் 8th tami...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை மாத அலகுத்தேர்வு வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 சிறுவினா விடை 10th TA...
- கல்வித்தொலைக்காட்சி ஆறாம் வகுப்பு தமிழ் நாளும் பாட...
- கல்வித்தொலைக்காட்சி ஆறாம் வகுப்பு தமிழ் நாளும் பாட...
- கல்வித்தொலைக்காட்சி ஏழாம் வகுப்பு தமிழ் நாளும் பாட...
- கல்வித்தொலைக்காட்சி ஏழாம் வகுப்பு தமிழ் நாளும் பாட...
- கல்வித்தொலைக்காட்சி எட்டாம் வகுப்பு தமிழ் நாளும் ப...
- கல்வித்தொலைக்காட்சி எட்டாம் வகுப்பு தமிழ் நாளும் ப...
- கல்வித்தொலைக்காட்சி ஒன்பதாம் வகுப்பு தமிழ் நாளும் ...
- கல்வித்தொலைக்காட்சி ஒன்பதாம் வகுப்பு தமிழ் நாளும் ...
- கல்வித்தொலைக்காட்சி பத்தாம் வகுப்பு தமிழ் நாளும் ப...
- கல்வித்தொலைக்காட்சி பத்தாம் வகுப்பு தமிழ் நாளும் ப...
- சொலவடைகள் பொம்மலாட்டம் ஏழாம் வகுப்பு விரிவானம் வின...
- சொலவடைகள் பொம்மலாட்டம் ஏழாம் வகுப்பு விரிவானம் வின...
- கல்வித் தொலைக்காட்சி வகுப்பு 6-12 ஒளிபரப்பு அட்டவண...
- வளர்தமிழ் ஆறாம் வகுப்பு உரைநடை VALAR TAMIL 6TH TAM...
- ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் முதலெழுத்தும் சார்பெழ...
- சொலவடைகள் ஏழாம் வகுப்பு தமிழ் விரிவானம் 7th tamil ...
- கோணக்காத்துப்பாட்டு எட்டாம் வகுப்பு தமிழ் கவிதைப்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம் நால்வகைக் குறுக்கங்கள...
- எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வினைமுற்று வினா விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 சிறுவினா விடை 10th TA...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 திருக்குறள் சிறுவினா ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 சிறுவினா விடை 10th TA...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 சிறுவினா விடை 10th TA...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 சிறுவினா விடை 10th TA...
- சொற்பூங்கா எட்டாம் வகுப்பு விரிவானம் தமிழ்க்கட்டுர...
- எட்டாம் வகுப்பு தமிழ் சொற்பூங்கா இயல் 1 விரிவானம் ...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் எழுத்துகளின் வகை தொகை...
- ஏழாம் வகுப்பு இலக்கணம் இயல் 1 குற்றியலுகரம், குற்ற...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர...
- பத்தாம் வகுப்பு இயல் 9 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 8 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 7 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 6 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 5 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 4 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 3 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 2 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ் 50 மதிப்பெண்கள் அலகுத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 1-9 தமிழ் 450 மதிப்பெண்கள் 1...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 1-9 தமிழ் 450 மதிப்பெண்கள் 1...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 9 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 8 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 7 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 6 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 5 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 4 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 3 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 2 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- ஒன்பதாம் வகுப்பு இயல் 1 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மத...
- பத்தாம் வகுப்பு இயல் 9 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 8 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 7 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 6 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 5 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 4 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 3 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 2 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ் 50 மதிப்பெண்கள் 1 மதி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 திருக்குறள் குறுவினா ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 வாழ்வியல் திருக்குறள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 குறுவினா விடை எளிமையா...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3, திருக்குறள் சிறுவினா...
- எழுத்துகளின் பிறப்பு எட்டாம் வகுப்பு இலக்கணம் இயல்...
- கோணக்காத்துப்பாட்டு 8ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 செயல...
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் இயல் 2 ஏழாம் வகுப்ப...
- காணிநிலம் இயல் 2 ஆறாம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்...
- ஓடை 8ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 செயல்பாட்டுத்தாள் 8...
- காடு இயல் 2 ஏழாம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள் ...
- சிலப்பதிகாரம் ஆறாம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 சிறுவினா விடை TENTH T...
- கூடா நட்பு குட்டிக்கதை koodaa natpu tamil kutty ka...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- மனவளமே மண்வளம் பேச்சுப்போட்டி உரை MANAVALAME MANVA...
- மாத்திரை ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் 6TH TAMIL IL...
-
▼
July
(146)