கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 வாழ்வியல் திருக்குறள் குறுவினா விடை எளிமையாக 10th tamil unit 3 thirukkural kuruvina vidai short questions and answers

  குறுவினா விடை        2 மதிப்பெண்கள்

1). 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

 

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

 

2). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

 

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை

 

3). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்தது போன்றது - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

 

விடை:

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

 

4). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா நாள்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு

 

விடை:

அ). கூவிளம் தேமா மலர்

தமிழ்த்துகள்

Blog Archive