1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப்
பாவலரேறு சுட்டுவன யாவை?
• பழமைக்குப்
பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.
• கடல்கொண்ட
குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.
• தென்னவனாம்
பாண்டிய மன்னனின் மகள்.
• உலகப்பொதுமறையாம்
திருக்குறளின் பெரும் பெருமை.
• பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.
• நிலைத்த
சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.
• பொங்கியெழும்
நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
2.’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத்
தொடர்களில் அமைக்க.
ü
§ நெல் நாற்று
நன்றாக வளர்ந்துள்ளது.
ü
§ தென்னம்
பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.
ü
§ மாங்கன்று
தளிர்விட்டது.
ü
§ வாழைக்கன்று
மழையின்றி வாடியது.
ü
§ பூச்செடியின்
கீழே சாண உரம் இட்டேன்.
3.’அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம்.
அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள
வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
ü
வினைமுற்று -
தொழிற்பெயர்
ü
அறிந்தது -
அறிதல்
ü
அறியாதது - அறியாமை
ü
புரிந்தது - புரிதல்
ü
புரியாதது - புரியாமை
ü
தெரிந்தது - தெரிதல்
ü
தெரியாதது - தெரியாமை
ü
பிறந்தது - பிறத்தல்
ü பிறவாதது - பிறவாமை
4.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.