1.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு
- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
• இக்குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.
• உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வந்து
இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.
• உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன்
அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது.
• உவமை - வேல் போன்ற ஆயுதத்தைக் காட்டி வழிப்பறி செய்வது.
• உவமஉருபு - போலும்
• ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக்
கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு
நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
2.கவிதையைத் தொடர்க.
• தண்ணீர் நிறைந்த குளம்
• தவித்தபடி வெளிநீட்டும் கை
• கரையில் கைபேசி படமெடுத்தபடி
• கவலையின்றி பலர்
• மனிதர்களை மறந்து
• மனித நேயம் குறைந்து.