- உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,
இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில்
காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப்
பேசினால்...... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
உணவாக நான்,
முக்கால் பங்கு நான்,
விளைவுக்கு நான்,
ஐம்பூதங்களுள் நான்,
மழையாக நான்,
பேராற்றல் நான்.
இவ்வாறு நீர்
தன்னைப்பற்றிப் பேசும்.
2.சோலைக்(பூங்கா)
காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
சோலைப்பூங்காற்று, மின்விசிறிக்காற்று உரையாடல்
சோலைக்காற்று - என்னைத்தேடி
வருபவர்களுக்கு உயிர்வளி மிகுந்த காற்றைத் தருகிறேன்.
மின்விசிறிக்காற்று -
இயலாதவர்களுக்கும் கூட இதமான காற்றைத்
தருபவன் நான்.
சோலைக்காற்று - என்னைத்
தூது விட்டன தமிழ் இலக்கியங்கள்.
மின்விசிறிக்காற்று - என்னை மேம்படுத்தி விற்பனைப் பொருளாக்கிவிட்டன
வணிக நிறுவனங்கள்.
சோலைக்காற்று - நதியில்
விளையாடி கொடியில் தலைசீவி நடப்பதாகக் கவிஞர் எனைப் பாடியிருக்கிறார்.
மின்விசிறிக்காற்று - என்னால் மின்சாரம் இல்லாமல் இயங்கமுடியாது, உன்போல் விடுதலைப் பறவையாய் வீதிஉலா வர
முடியாது.
சோலைக்காற்று - புலம்பாதே, நாம் இணைந்தே இம்மனிதர்களை மகிழ்விக்கிறோம், அவர்கள் பதிலுக்கு நம்மை மாசாக்குகிறார்கள், காசாக்குகிறார்கள்.
மின்விசிறிக்காற்று - ஆம் நண்பா.
3.தோட்டத்தில்
மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில்
குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
தொடர் |
வகை |
விரிவு |
பூங்கொடி |
உவமைத்தொகை |
பூப்போன்ற கொடி |
பூப்பறித்த |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
பூ(ஐ)வைப் பறித்த |
பூப்பறித்த பூங்கொடி |
அன்மொழித்தொகை |
பூவைப்பறித்த(பெண்)பூங்கொடி |
தண்ணீர்த்தொட்டி |
இரண்டாம் வேற்றுமை
உருபும்பயனும் உடன்தொக்கதொகை |
தண்ணீரை உடைய தொட்டி |
குடிநீர் |
வினைத்தொகை |
குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் |
சுவர்க்கடிகாரம் |
ஏழாம் வேற்றுமை
உருபும்பயனும் உடன்தொக்கதொகை |
சுவரின் கண் உள்ள
கடிகாரம் |
ஆடுமாடுகள் |
உம்மைத்தொகை |
ஆடுகளும் மாடுகளும் |
மல்லிகைப்பூ |
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
மல்லிகை-சிறப்பு பூ-பொதுப்பெயர் |
மணிபார்த்தாள் |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
மணியைப் பார்த்தாள் |
4.மழைநின்றவுடன்
புலப்படும்
குறிப்பு : இலைகளில்
சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் சளப் தளப்
என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
மழைநின்றவுடன்
புலப்படும் காட்சி – வருணனை
• குழந்தைகளின் தளிர் முத்தமென இலைகளில் சொட்டும் நீர் தரை
தொட்டது.
• உடலில் ஓடும் மெல்லிய குளிரையும் பொருட்படுத்தாமல் தேங்கிய
குட்டைகளில் தாங்களே இசைத்த பாடலுடன் சளப்தளப் என்ற தாளத்தோடு குதித்தாடின
குழந்தைகள்.
• திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற ஆன்றோர் வாக்கை
நனவாக்கும் முயற்சியில் இறங்கினர் ஓடும் நீரில் காகிதக்கப்பல் விடும்
இளஞ்சிறார்கள்.