கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 குறுவினா விடை எளிமையாக 10th tamil unit 4 kuruvina vidai short questions and answers

 குறுவினா விடை        2 மதிப்பெண்கள்

1). வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

விடை:

அ). செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறை ரோபோ ஆசிரியர்.

ஆ). நுட்பமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ ரோபோ.

 

2). வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

'வருகின்ற கோடை விடுமுறை' என்பது எதிர்காலம்.  

இத்தொடரில் எதிர்காலப் பயனிலையாக 'செல்வேன்' என்று அமைவதற்குப் பதிலாக நிகழ்காலப் பயனிலை 'செல்கிறேன்' என்று வந்துள்ளது.  

இங்கே நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து, இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.

 

3). மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 

நோயாளி மருத்துவர்பால் கொண்டிருக்கும் இத்தகைய அன்பும் நம்பிக்கையுமே அவரை விரைவிலேயே குணமடையச் செய்யும். 

மருத்துவர் நோயாளி மீது காட்டும் அன்பும் அக்கறையும் அவருக்குக் 'கைராசிக்காரர்' என்ற பெயரைப் பெற்றுத் தரும்.

 

4). உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவை எனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

எதுவுமே இல்லாத பெருவெளியில் பேரொலியுடன் காற்று முதலான அணுக்களுடன் வளர்கின்ற வானம் தோன்றியது.

அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து நெருப்புப் பந்தாய்ப் பூமி உருவானது.

பிறகு பூமி குளிர மழை பெய்தது. 

தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.

 

5). "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.  இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

தமிழ்த்துகள்

Blog Archive