குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). 'கரப்பிடும்பை இல்லார்'
- இத்தொடரின் பொருள் கூறுக.
கரப்பிடும்பை
இல்லார்:
'தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும்
துன்பத்தைத் தராத நல்லார்' என்பது இதன் பொருளாகும்.
2). தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும்
வாய்பாடுகளையும் எழுதுக.
தஞ்/சம் - நேர் நேர்
- தேமா
எளி/யர் - நிரை நேர்
- புளிமா
பகைக்/கு - (நிரை நேர்) - நிரைபு - பிறப்பு
(வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)
3). வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை
எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
4). பின்வருவனவற்றுள்
கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு,
ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
அ). செந்நாப்போதார், உழைத்ததால்
கிடைத்த ஊதியத்தைக் கூரான ஆயுதம் என்கிறார்.
ஆ). ஏனெனில், உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை
வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.