குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). 'கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய்
வார்த்தை உடம்பு தொடாது'
அ).அடி
எதுகையை எடுத்து எழுதுக.
ஆ)இலக்கணக்
குறிப்பு எழுதுக.- கொள்க, குரைக்க.
விடை:
அ).
அடியெதுகை: 'ள்'
கொள்வோர்
- உள்வாய்
ஆ). இலக்கணக் குறிப்பு:
கொள்க, குரைக்க -
வியங்கோள் வினைமுற்றுகள்
2). குறள்
வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
குறள்
வெண்பாவின் இலக்கணம்:
வெண்பாவின்
பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
முதல்
அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
எடுத்துக்காட்டு:
கற்க
கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
3). குறிப்பு
வரைக. - அவையம்
அவையம்:
அறம்
கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
அறம்
கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.
உறையூரில்
இருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மதுரைக்காஞ்சி,
'மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது' என்கிறது.
4). காலக்கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
காலக்கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது:
கையிலே வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத்தூரிகை
கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.
5). வஞ்சிப்பாவிற்கு
உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே
தொடராக இணைத்து எழுதுக.
கலவைத்
தொடர்:
வஞ்சிப்பாவிற்குத்
தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.