குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). காட்டில் விளைந்த
வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில்
அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி
எழுதுக.
முதற்பொருள்:
நிலம்: முல்லை
(காடு)
பெரும்பொழுது:
கார்காலம் (மழைக்காலம்)
சிறுபொழுது: மாலை
கருப்பொருள்:
உணவு: வரகு
2). "நேற்று நான்
பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும்
சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!" என்று
சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.
அயற்கூற்று:
முன்தினம் அவன் பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற
கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக
மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.
3). உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய்
எழுந்திராய்'
காலதூதர் கையிலே 'உறங்குவாய்
உறங்குவாய்'
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
அ)
"உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு இன்றிலிருந்து
இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்!
எழுந்திடுவாய்!" என்று சொல்லி எழுப்புகிறார்கள்.
ஆ) "காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லை
பிடித்து,
காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக"
என்று உறங்கச் சொல்கிறார்கள்.
4). சாந்தமானதொரு
பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை
எழுதுக.
சாந்தமானதொரு
பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்
பொருள்: ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத்
தாங்குகின்றது.
5). கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில்
உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப்
பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
அ) உழவர்கள் வயலில் உழுதனர்.
ஆ) நெய்தல் பூச்செடியைப்
பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.