கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, July 28, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 சிறுவினா விடை 10th TAMIL UNIT 5 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 சிறுவினா        3 மதிப்பெண்கள்

1.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?

விளக்கம் தருக.

       பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

       கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.

       மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.

       மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.

       இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

       இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.

2.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

       "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்".

        விலங்குகளிடமிருந்து  மனிதனை வேறுபடுத்துவது கல்வி.

       "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி.

       குடும்பச் சூழ்நிலை கருதி கற்றலை நிறுத்துவது சரியல்ல.

       அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தி நாம் படிப்பைத் தொடர வேண்டும்.

       விடுமுறை நாள்களில் ஏதேனும் பிற வேலைகள் செய்து குடும்பச் செலவுக்காகப் பொருள் ஈட்டலாம்.

       போட்டி மிகுந்த இவ்வுலகில் நம் எதிர்கால வாழ்வு சிறக்கக் கல்வி அவசியம்.

       எனவே பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் செல்வது முறை அல்ல.

       என்னால் இயன்ற உதவியை நானும் என் தந்தையிடம் கேட்டு உனக்குச் செய்கிறேன்.

       இவ்வாறு  என் நண்பனிடம் கூறி, பள்ளிக்கு வந்து கல்வியைத் தொடரச் செய்வேன்.

3.ஐநா அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால், ஒருவர் பேசும் போதே மொழிபெயர்ப்பது 'விளக்குவது' என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.

 இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக

1) மொழி பெயர்ப்புக்கும் விளக்குவதற்கும் உள்ள வேறுபாடு யாது?

2) அனைத்து நாட்டு உறுப்பினர்களும் இடம்பெறும் ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை ஒருவர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்?

3) ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?

4) மொழிபெயர்ப்பாளர் கூறுவதைப் பார்வையாளர்கள் --------- மூலம் கேட்டு அவரவர் மொழியில் புரிந்து கொள்ள முடியும்.

அ) ஒலிபெருக்கி

ஆ) ஒலிவாங்கி

இ) கணினி

ஈ) காதணி கேட்பி

5) ஐ.நா.  அவையில் மொழிபெயர்ப்பாளர் அமர்ந்திருக்கும் இடம் ........

அ) முன்வரிசையில்

ஆ) பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில்

இ) பின்வரிசையில்

ஈ) தனி மேடையில்

4.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

பொருள்கோள் வகை – ஆற்றுநீர்ப் பொருள்கோள்

மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே – நன்னூல்.

மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.

எனவே, இவ்வாறு வருவது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும்.

 

தமிழ்த்துகள்

Blog Archive