கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, July 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 சிறுவினா விடை 10th TAMIL UNIT 3 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 

  1. ’கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு!

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

கண்ணே கண்ணுறங்கு -     விளித்தொடர்

காலையில் நீ எழும்பு       -     வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

மாமழை பெய்கையிலே -     உரிச்சொற்றொடர்

மாம்பூவே கண்ணுறங்கு -     விளித்தொடர்

பாடினேன் தாலாட்டு        -     வினைமுற்றுத்தொடர்

ஆடி ஆடி                  -     அடுக்குத்தொடர்

ஓய்ந்துறங்கு               -     வினையெச்சத்தொடர்

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

முல்லை நிலத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்கள்

வரகு, சாமை, பால் மற்றும் பால் பொருள்கள்.

"வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

 முரமுரெனவே புளித்த மோரும்"-என்று தம் தனிப்பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.

மருத நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள்

செந்நெல், வெண்ணெல்

இளையான்குடி மாற நாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

3.புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக

       கோவில்களிலும் மடாலயங்களிலும் அக்காலத்தில் உணவு வழங்கப்பட்டது. இக்காலத்தில் அரசே கோவில்களில் 'அன்னதானத் திட்டம்' செயல்படுத்தி வருகிறது.

       அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்தம் குடும்பத்திலுள்ளோர் பிறந்த நாளுக்கு ஏழை எளியோருக்கு உணவு உடை வழங்கும் விழா எடுக்கப்பட்டது. இன்றோ பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவை ஆற்றி வருகின்றன.

       உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அழைத்து திருவிழாக்களில் கலந்து கொள்ளச் செய்வதோடு அவர்களுக்கு விருந்து படைப்பது இன்றும் தொடர்கிறது.

 4.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

       எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்! சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்! மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்! மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள் .

       அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

        அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

       உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள்", என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்த்துகள்

Blog Archive