குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). "நமக்கு
உயிர் காற்று
காற்றுக்கு
வரம் மரம் - மரங்களை
வெட்டி
எறியாமல் நட்டு வளர்ப்போம்"
- இது
போன்று உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
உலகக்
காற்றுநாள் விழிப்புணர்வுக்கான முழக்கத்தொடர்கள்:
1). கரிவளி சுருக்கு உயிர்வளி பெருக்கு
2). இயற்கை செறிவூட்டிகள் இங்கிருக்கும் மரங்கள்
2). வசன கவிதை -
குறிப்பு வரைக.
வசன
கவிதை
உரைநடையும்
கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு
உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.
இவ்வடிவம்
பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3). தண்ணீர்
குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து
எழுதுக. தொடரில் அமைக்க.
அ).
தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.
தினமும்
ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஆ).
தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்.
இனியா தயிரை உடைய குடத்தை
எடுத்து வந்தாள்.
4). பெற்றோர்
வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்
சொற்களை எழுதுக.
அழும்
தம்பிக்கு என்னுடைய ஆறுதல்:
அம்மாவும்
அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
உனக்குப்
பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள்.
விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!
அக்கா, உன்கூட விளையாடுவேன்; ஆசையாய்த் தூக்கிக் கொஞ்சிடுவேன்.
அழாதே! முத்தே அழாதே!
5). மாஅல்
- பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
மாஅல்
பொருள்:
மாஅல் - மால் - திருமால்.
பெருவடிவு
கொண்டு உலகத்தை ஓரடியால் அளந்தவர்.
இலக்கணக்குறிப்பு: மாஅல்
-இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை)