கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 25, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 சிறுவினா விடை 10th TAMIL UNIT 4 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 

1.மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தி –

v  வாளால் அறுத்துச் சுடினும் ... எனும் பாடல் பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடியது.

v  இப்பாடலில் இடம்பெற்ற வரியே மேற்கூறியது.

v  உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர்தம் கத்தியால் அறுத்துச்சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

v  அடித்தாலும் அன்னையின் கை பிடித்து அழும் குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும் துன்பமும் நன்மைக்கே எனக் கருதி இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார் கூறியுள்ளார்.

2.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

       மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்யக் கணினிக் கரங்கள் நீள்கின்றன.

       கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதை பாடும் எந்திரங்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள் எனப் புதிது புதிதான வழிகளில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்றன இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.

       கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து தேவைப்படும் வேலையில் வெளிப்படுத்துவதில் இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறி உள்ளது.

       அதேவேளையில் மனிதனைச் சோம்பேறி ஆக்கவும் மூளையின் சிந்தனைத் திறனுக்கு ஓய்வு கொடுப்பது போலவும் இதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளுக்கு நம் சந்ததியினர் பாதிப்பதாகவும் உணர்ந்தால், இன்னும் சற்றுக் கவனத்தோடு நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கையாள வேண்டும் என்றே தோன்றுகிறது.

3.மனிதர்களின் மூளையைப் போன்றது,  செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.

இதனால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத் தொழில்நுட்பம்‘ என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்

       அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது கண்காணிப்புக் கருவி; போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதைச் சுட்டிக்காட்டி சுருக்கமான வழி சொல்கிறது திறன்பேசி. கண் அறுவை மருத்துவம், சதுரங்கம் விளையாடுதல், அழகான கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்குதல், ஊடகங்களில் தேடுபொறிகளில் தேடி கிடைக்கும் விடைகள், வாடிக்கையாளர்களுடன் உரையாடும் 'இலா' மென்பொருள் என அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கிவிட்டது செயற்கை நுண்ணறிவு.

       ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்கள்; வயதானவர்களுக்கு உதவியாய் தோழனாய் பணியாளாய் ரோபோக்கள், ஊர்திகளை விபத்துகள் இன்றி இயக்கவும் விடுதிகள், வங்கிகள், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், சிறுவர் பூங்காக்கள் இவற்றிலெல்லாம் உரையாடவும் விளையாடவும் ரோபோக்கள், என எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களின் பிடியில்.

       கல்வி அறிவுடன் மின்னணுக் கல்வி அறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும்  அறிந்திருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வாழ்க்கையையும் வணிகத்தையும் நடத்த முடியும். மனிதனின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றிலும் நன்மையும் தீமையும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கேற்ப மனிதர்கள் தங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.

4.நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய  குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம் ”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

நிறைத்திருந்தது

நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்

வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு

கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்

மாடு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்

இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை

துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா

என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்

அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்

இதுவும்

நீரைக் குடித்தாள்

குடித்தது

 

 

 

 

தமிழ்த்துகள்

Blog Archive