குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). தீவக அணியின் வகைகள்
யாவை?
தீவக அணி மூன்று
வகைப்படும். அவை:
முதல் நிலைத் தீவகம்
இடை நிலைத் தீவகம்
கடை நிலைத் தீவகம்.
2). நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடர்களாக்குக.
தனி வாக்கியங்கள்:
நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதல் உண்டு.
நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.
3). "காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக்
காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?
காய்மணி யாகு
முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்:
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே,
தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன.
அதுபோல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.
4). 'அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - இக்குறளில்
பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி,
அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால்,
இது நிரல்நிறை அணியாயிற்று.
5). வாழ்வில் தலைக்கனம், 'தலைக்கனமே
வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக்
கூறுகிறார்?
வாழ்வில் தலைக்கனம்:
பணம், பதவிகளால்
வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உலகில் பலர் உண்டு.
தலைக்கனமே வாழ்வு:
அடுத்த வேளை உணவுக்காக, அலுக்காமல் கல் சுமக்கும் சித்தாளுக்கு தலைக்கனமே
வாழ்வாகிப் போனது.