ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – தமிழ் எழுத்துகளின் வகை தொகை
1.கற்றல் விளைவு
எழுத்துகளின் வகை தொகைகளை அறியும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்த இலக்கணம்
குறித்து உணர்தல்.
3.முன்னறிவு
உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றை மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த மாத்திரை குறித்த செய்திகளைக் கூறச் செய்தல்.
4.விதைநெல்
தமிழ் மொழியின்
இலக்கண வகைகள் ஐந்து – எழுத்து – உயிர் எழுத்துகள் – மாத்திரை – மெய்யெழுத்துகள் –
உயிர்மெய் – ஆய்த எழுத்து.
5.விதைத்தல்
இலக்கண வகைகள்,
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள், நெடில் எழுத்துகள், மாத்திரை,
மெய்யெழுத்துகளின் வகைகள், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில், ஆய்த எழுத்து -
இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
இலக்கண வகைகள் குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.
6.கருத்துப்புனைவு
7.கருத்துத்தூவானம்
எழுத்துகள், வகைகள், மாத்திரை குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.
குறில்
எழுத்துகளையும் நெடில் எழுத்துகளையும் உச்சரித்துப் பழகுதல்.
8.விளைச்சல்
ஐந்து வகை இலக்கணங்களை எழுதுக.
மாத்திரை
என்பது யாது?
மெய்
எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு .....................................
9.சங்கிலிப்பிணைப்பு
உங்கள் பெயருக்கான மாத்திரை அளவைக் கண்டுபிடி.
ஆய்த
எழுத்து இடம்பெறும் சொற்களைத் தொகுத்தல்.