கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 10, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 சிலப்பதிகாரம், காணிநிலம் 6th model notes of lesson tamil silappathikaram, kaani nilam term 1 unit 2

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 6

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 2

தலைப்பு – சிலப்பதிகாரம், காணிநிலம்

பாடத்தின் தன்மை

          இயற்கை -    இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் வாழ்த்து பாடல், பாரதியார் இயற்றிய பாரதியார் கவிதைகள் என்னும் நூலில் உள்ள காணிநிலம் பாடல்.

கவிதைப்பேழை.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல்.

துணைக்கருவிகள்

    இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-6th-tamil-silappathikaram-kuruvina.html

          https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_23.html

          https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_22.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/2-6th-tamil-worksheet-with-pdf.html

பாட அறிமுகம்

          இயற்கை, நிலா, கதிரவன், மழை குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த இயற்கையின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

          வீடு குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த வீட்டின், இயற்கையின் சிறப்பைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          பாடல், பாடலின் பொருளை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.    

கற்றல் திறன்கள்

          கடலும், மலையும், கதிரும், நிலவும், மழையும், பனியும் இயற்கையின் கொடைகள். நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் ஆற்றலையும் மழையின் பயனையும் சிலப்பதிகாரம் பாராட்டுவதை உணர்தல்.

          அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள். இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்தல். இயற்கையைப் பலவகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு இல்லத்தைப் பற்றி அறிதல்.

மனவரைபடம்



தொகுத்தல்

          சோழ மன்னன் வெண்கொற்றக் குடை போல வெண்ணிலா உலகுக்கு இன்பம் அளிக்கிறது, சோழனுடைய ஆணைச் சக்கரம் போல கதிரவன் இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது, உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழை மக்களைக் காக்கிறது என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          காணி அளவு நிலத்தில் தூண்கள், மாடங்களுடன் அழகிய மாளிகை கட்டி, கிணறும் இளநீர் தரும் தென்னையும் நிலவொளியும் குயிலின் ஓசையும் இளந்தென்றலும் வேண்டும் என பாரதியார் விரும்புவதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          இயற்கையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

வலுவூட்டல்

          சிலப்பதிகாரப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          இயற்கையின் சிறப்புகளை முக்கியத்துவத்தை அறிந்து வரல்.

          காணிநிலம் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          வீட்டின் இன்றியமையாமையைப் பட்டியலிடுதல்.

மதிப்பீடு

          இயற்கை போற்றத்தக்கது ஏன்?

          சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

          நீ விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களை எழுதுக.

          பொருள் கூறுக.

          திங்கள், அலர், திகிரி, அளி, காணி, மாடங்கள், சித்தம்.

          இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணம் என்ன?

          காணிநிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

          கிணறு என்பதைக் குறிக்கும் சொல் ......................

          நீ விரும்பும் மரங்களின் பெயர்களை எழுதுக.

          நீ விரும்பும் கற்பனை வீடு குறித்து எழுதுக.

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 614

புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில்  பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

தொடர்பணி

          இளங்கோவடிகள், பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          இயற்கையின் பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.

          நிலா என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.

          வீடு என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.


தமிழ்த்துகள்

Blog Archive