எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 2
தலைப்பு – ஓடை, கோணக்காத்துப்பாட்டு
பாடத்தின் தன்மை
கவிதைப்பேழை. இயற்கை - வாணிதாசன் இயற்றிய தொடுவானம் என்னும் நூலில் உள்ள ஓடை என்னும் பாடல், செ.இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் உள்ள வெங்கம்பூர் சாமிநாதன்
இயற்றிய கோணக்காத்துப்பாட்டு என்னும் பாடல்.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல்.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf-odai.html
https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2021/04/2-odai-8th-tamil-kuruvina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/07/konakathu-pattu-8th-tamil-seyyul.html
https://tamilthugal.blogspot.com/2021/04/2-konakathupattu-tamil-kuruvina-vidai.html
பாட அறிமுகம்
நீர்நிலைகளின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
ஓடையைப்
பார்த்தவர்கள், அதில் குளித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.
இயற்கைச் சீற்றங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்
செய்தல்.
புயலால்
ஏற்படும் துன்பங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
பாடல்,
பாடலின் பொருளை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.
கற்றல் திறன்கள்
கவின்மிகு
காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும்
ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை என்பதை உணரும் திறன்.
அழகான அமைதியான இயற்கை மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது. ஆனால் அது சீற்றம்
கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்பதை உணரும் திறன்.
மனவரைபடம்
தொகுத்தல்
ஓடையில் நீந்தி
விளையாட மனம் ஆர்வம் கொள்வது, சலசல என ஒலி எழுப்ப ஓடை எங்கு கற்றது, வருணிக்க
இயலாத அழகு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
பயிர்களைச் செழிக்கச் செய்வது, உணவு
தந்து வறுமை போக்குவது, கரை மோதுவது, புற்களுக்கு இன்பம் சேர்ப்பது, இரக்கம்
இல்லாதவர் நாண உழைப்பைக் கொடையாகத் தருவது பெண்களின் வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப முழவை
முழக்குவது போல் ஒலி எழுப்புவது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
புயல் காற்றின்
அழிவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். புயலால் கூரைகள் சரிந்தன,
தென்னம்பிள்ளைகள் வீணாயின, பருத்திச்செடிகள் சிதைந்தன, மாடி வீடுகள் விழுந்தன,
மரங்கள் ஒடிந்தன, கப்பல் கவிழ்ந்தது, மக்கள் தடுமாறினர், ஆடு மாடுகள் இறந்தன,
சித்தர்களின் கொல்லிமலையைச் சுற்றி புயல் அடித்தது போன்றவற்றை மாணவர்கள் மனதில்
விதைத்தல்.
வலுவூட்டல்
நீர் நிலைகளின் இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.
இயற்கை
வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.
விழிப்புணர்வுடன்
இருக்கும் எண்ணத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்.
மதிப்பீடு
பொருள் தருக
ஈரம்,
நாணம், முழவு, புன்செய், சேகரம், வாகு, காலன், மெத்த
ஓடையின்
பயன்கள் யாவை?
வாணிதாசன்
குறித்து நீ அறிவன யாவை?
ஓடை
எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
நீ
அறிந்த நீர்நிலைகளின் பெயர்களைக் கூறு.
கொல்லிமலை
பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
கோணக்காற்றால்
வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
இயற்கைச்
சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
நீ
அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறு.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 804
தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிப் பேசுதல்.
தொடர்பணி
இயற்கைக் காட்சி ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி மகிழுதல்.
பாடலை
இசை நயத்துடன் பாடிப் பழகுதல்.
இயற்கையின்
இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.
இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக் காரணங்களை அறிதல்.
இயற்கைச்
சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுதல் என திட்டமிடல்.
மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.