கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 10, 2022

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 7th model notes of lesson tamil kadu, apadiye nirkatum antha maram term 1 unit 2

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 2

தலைப்பு – காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

பாடத்தின் தன்மை

          கவிதைப்பேழை. இயற்கை -         சுரதா இயற்றிய சுரதா கவிதைகள் என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியில் உள்ள காடு பாடல், ராஜமார்த்தாண்டன் இயற்றிய அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல்.

துணைக்கருவிகள்

    இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/07/2-7th-tamil-worksheet-with-pdf-kaadu.html

          https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_59.html

          https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_66.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-kaadu-unit-2-term-1.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/2-7th-tamil-worksheet-with-pdf-appadiye.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/7th-tamil-appadiye-nirkattum-antha-maram.html

          https://tamilthugal.blogspot.com/2022/06/kavignar-raja-marthandan.html

பாட அறிமுகம்

          காட்டின் மரத்தின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          காடு, மரம் குறித்து மாணவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          பாடல், பாடலின் பொருளை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.    

கற்றல் திறன்கள்

          ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. காட்டின் வளமே நாட்டின் வளம், காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி  உணரும் திறன்.

          நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. மரங்கள் பற்றிய நினைவுகள் மறையாது என்பதை விளக்கும் கவிதையை உணரும் திறன்.

மனவரைபடம்




தொகுத்தல்

          காடு மலர்கள், நிழல், காய்கனிகள் போன்றவற்றைத் தரும், மயில் நடனமாடும், பன்றி கிழங்கு உண்ணும், பாம்பு கலங்கும், நரி ஊளையிடும், யானை நடைபோடும், குயில் கூவும், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அலையும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          காட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          காணி அளவு நிலத்தில் தூண்கள், மாடங்களுடன் அழகிய மாளிகை கட்டி, கிணறும் இளநீர் தரும் தென்னையும் நிலவொளியும் குயிலின் ஓசையும் இளந்தென்றலும் வேண்டும் என பாரதியார் விரும்புவதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          நாவற்பழ மரம், காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், சுட்ட பழங்கள், பழம் பொறுக்கும் தங்கச்சிகள், வௌவால் கூட்டம், கிளியாந்தட்டின் சுவாரசியம், பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்ட மரம் – கவிதையின் உணர்ச்சிப் பெருக்கை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          இயற்கையின் மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

வலுவூட்டல்

          காடு பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          காட்டின் மரத்தின் சிறப்புகளை அறிந்து வரல்.

          காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களை அறிதல்.

          கவிதையை உணர்வுடன் மாணவர்களை வாசிக்கச் செய்தல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களை அறிதல்.

மதிப்பீடு

          விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது?

          காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

          காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

          பொருள் கூறுக.

          நச்சரவம், ஈன்று, கொம்பு.

          காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?

          நாவல் மரம் பற்றிய நினைவுகளாக கவிஞர் கூறுவன யாவை?

          சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

          ராஜமார்த்தாண்டன் குறித்து அறிந்தவற்றை எழுதுக.

          பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 713

பல்வேறு பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் – வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை - இனங்கானல்

தொடர்பணி

          உவமைக் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          காட்டின் பெருமைகளைத் தொகுத்தல்.

          ராஜமார்த்தாண்டன் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          மரத்தின் பெருமைகளைத் தொகுத்தல்.

          ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.



தமிழ்த்துகள்

Blog Archive