ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 7
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – குற்றியலுகரம், குற்றியலிகரம்
1.கற்றல் விளைவு
குற்றியலுகர, குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறியும் திறன்
பெறுதல்.
2.உணர்தல்
குற்றியலுகரம்,
குற்றியலிகரச் சொற்களை உதாரணங்களுடன் உணர்தல்.
3.முன்னறிவு
சார்பெழுத்துகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாத்திரை அளவு
குறித்து மாணவர்களிடம் வினவுதல்.
4.விதைநெல்
குற்றியலுகரம் – வகைகள் – எடுத்துக்காட்டுகள் – முற்றியலுகரம் –
குற்றியலிகரம்.
5.விதைத்தல்
குற்றியலுகரம்,
முற்றியலுகரம், குற்றியலிகரம் இவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
ஆறுவகையான குற்றியலுகரங்களுக்கும்
எடுத்துக்காட்டுகளை அறிதல். காது – நெடில் தொடர்க் குற்றியலுகரம், எஃகு - ஆய்தத்
தொடர்க் குற்றியலுகரம், வரலாறு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், பாக்கு -
வன்தொடர்க் குற்றியலுகரம், பந்து - மென்தொடர்க் குற்றியலுகரம், மார்பு -
இடைத்தொடர்க் குற்றியலுகரம் இவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
6.கருத்துப்புனைவு
7.கருத்துத்தூவானம்
நாம் பயன்படுத்தும் கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பற்றி
அறிதல்.
குற்றியலுகர,
குற்றியலிகரச் சொற்களை வாசித்துப் பழகுதல்.
8.விளைச்சல்
குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
குற்றியலிகரம்
என்றால் என்ன?
9.சங்கிலிப்பிணைப்பு
கு, சு, டு, து, பு, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச்
சொற்களைத் திரட்டுதல்.
குற்றியலுகர
எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டறிதல்.
நெடில்தொடர்க்
குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் – எடுத்துக்காட்டுகளை எழுதி
வேறுபடுத்துதல்.