எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 2
தலைப்பு – வெட்டுக்கிளியும் சருகுமானும்
பாடத்தின் தன்மை
விரிவானம். இயற்கை – மனிஷ் சாண்டி,
மாதுரி ரமேஷ் தொகுத்த காடர்களின் கதைகளைத் தமிழாக்கம் செய்த வ.கீதாவின் யானையோடு
பேசுதல் நூலில் உள்ள கதை.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், கதை சொல்லும் முறை.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-essay.html
https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-8th-tamil.html
பாட அறிமுகம்
பஞ்சதந்திரக் கதைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த விலங்குகள் கதைகளைப் பகிரச் செய்தல்.
வாசித்தல்
கதையை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத்
தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.
கற்றல் திறன்கள்
மொழிபெயர்ப்புப்
படைப்புகளின் மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதிக்கும் திறன்.
மனவரைபடம்
தொகுத்தல்
சிறுத்தை
பித்தக்கண்ணு, பெண் சருகுமான் கூரனைத் துரத்தி வர அதைக் கண்ட வாயாடி பச்சை
வெட்டுக்கிளி அதனுடன் பேச, வாயைத் திறக்காதே என்ற கூரன் ஒளிந்துகொள்கிறது.
வெட்டுக்கிளியிடம் பித்தக்கண்ணு விசாரிக்க அது தாவிக் குதிக்க புனுகுப்பூனையின்
நாற்றத்தால் கூரன் தப்பித்த கதையைக் கூறுதல்.
மதிப்பீடு
இக்கதையில் சிறுத்தையின் பெயர்
..........................
வெட்டுக்கிளியும்
சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
உனக்குப்
பிடித்த விலங்குகள் கதை ஒன்றை எழுதுக.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 804
தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக்
கதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்.
தொடர்பணி
வெட்டுக்கிளியும் சருகுமானும்
கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
மாணவர்கள் விரும்பும் பஞ்ச தந்திரக் கதை
ஒன்றைக் கூறச் செய்தல்.