கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, July 01, 2022

தியாகி சங்கரலிங்கரனாரின் உயிர்த் தியாகம் தமிழ்க்கட்டுரை thiyaki sankaralinkaranarin uyir thiyagam tamil essay katturai

 

தியாகி சங்கரலிங்கரனாரின் உயிர்த் தியாகம்

முன்னுரை

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தோன்றிய தலைவர்கள் பலர். கண்டன் சங்கரலிங்கனார் என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும்மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்குத்தமிழ்நாடுஎன்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். அவரைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இளமைப்பருவம்                                                        தமிழ்த்துகள்

சங்கரலிங்கம் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு என்ற ஊரைச் சேர்ந்தவர். காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர், காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார்.  இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துகளை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார்.

போராடத்திட்டம்                                              தமிழ்த்துகள்

விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி சிறீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம. பொ. சி.யின் தமிழரசுக் கழகம்சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்.

உண்ணாவிரதம்                                                        தமிழ்த்துகள்

இவர் காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 சூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்குத் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன், சூலை 27ஆம் தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதிருந்த காங்கிரசு அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

தலைவர்கள் கோரிக்கை                                             தமிழ்த்துகள்

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்அண்ணாதுரைகாமராசர்ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர், இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை. நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணாதுரை. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.                                         தமிழ்த்துகள்

79 நாள்கள்

79 நாள்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. (சூலை 5 நாள்கள், ஆகசுடு 31 நாள்கள், செப்டம்பர் 30 நாள்கள், அக்டோபர் 13 நாள்கள், மொத்தம் 79 நாள்கள்) தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

மறைவு                                                           தமிழ்த்துகள்

அக்டோபர் 10ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அக்டோபர் 13, 1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இறுதி விருப்பம்                                                         தமிழ்த்துகள்

இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து, இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். கம்யூனிஸ்டுத் தலைவர்  தங்கமணிஜானகியம்மா மருத்துவமனைக்குச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, உடலைப் பெற்றனர். மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது. 

மேலும் பல கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                     தமிழ்த்துகள்

தமிழ்நாடு பெயர் மாற்றம்

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

முடிவுரை                                                                 தமிழ்த்துகள்

பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் அரசு 1967, ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடுஎன பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து திசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.

தியாகத்தின் பேருருவமான தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக‍ அரசால் விருதுநகர் கல்லூரிச் சாலையில் நகராட்சி பூங்கா அருகில் 76 லட்சம் செலவில், மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.                                  தமிழ்த்துகள்

மேலும் பல கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                     தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive