ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 2
தலைப்பு – கிழவனும் கடலும்
பாடத்தின் தன்மை
விரிவானம்.
இயற்கை – எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஆங்கிலப் புதினத்தின் மொழிபெயர்ப்பான கிழவனும்
கடலும் படக் கதை.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், கதை சொல்லும் முறை.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/04/kizhavanum-kadalum-6th-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2021/08/1-2-kilavanum-kadalum-6th-tamil.html
பாட அறிமுகம்
மீன்பிடித்தல் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த கடலின் சிறப்பைக் கூறச் செய்தல்.
படக்
கதை குறித்து மாணவர் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
படக்
கதையை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.
கற்றல் திறன்கள்
முயற்சிகள்
ஓய்வதில்லை என்பதை உணர்த்தும் மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் வாழ்வை
அறிதல்.
மொழிபெயர்ப்புக் கதையைப் படித்து உணரும்
திறன் பெறுதல்.
மனவரைபடம்
தொகுத்தல்
எண்பத்து நான்கு
நாள்களாக ஒரு மீனும் கிடைக்காத நிலையில் அன்று சாண்டியாகோ ஒரு பெரிய மீனைப்
பிடிக்கப் போராடியதை விளக்குதல். பசியோடும் சோர்வோடும் இருந்தாலும் பெரிய மீனை
ஈட்டியால் குத்தி, படகின் ஓரத்தில் கட்டினார். நாற்பது நாள்கள் தன்னுடன் மீன்
பிடிக்க வந்த மனோலினிடம் சொல்ல நினைத்தபோது சுறாக்கள் தின்றது போக எலும்பும்
தலையும் மட்டுமே மிஞ்சியிருந்ததை விளக்குதல்.
வலுவூட்டல்
கடலின் சிறப்புகளைக் கூறுதல்.
விடாமுயற்சி பற்றி விளக்குதல்.
படக்கதையின் சிறப்புகளைக் கூறுதல்.
மதிப்பீடு
சாண்டியாகோவிற்கு எத்தனை நாள்களாக மீன் கிடைக்கவில்லை?
படக்கதை
பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
கிழவனும்
கடலும் என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 617
செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள் இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள்
போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும்
கருத்துகளையும் வெளிப்படுத்துதல்.
தொடர்பணி
கடல்காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
சாண்டியாகோ
குறித்து உன் கருத்துகளை எழுதுக.
படக்கதை
பற்றிய உன் அனுபவங்களைக் கூறு.