ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 2
தலைப்பு – சிறகின் ஓசை
பாடத்தின் தன்மை
உரைநடை
உலகம். இயற்கை - பறவைகள், சிட்டுக்குருவி குறித்த கட்டுரை.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல்.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-sirakin-osai-term-1.html
https://tamilthugal.blogspot.com/2021/08/6-2-6th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/08/6th-tamil-siragin-osai.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html
பாட அறிமுகம்
பிடித்த பறவைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த பறவையின் சிறப்பைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
கட்டுரை,
கட்டுரையின் பொருளை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும்
வாசித்தல்.
கற்றல் திறன்கள்
மனிதர்களைப் போலவே
பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன என்பதை அறிதல்.
பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
இடையேயான தொடர்பை அறியும் திறன் பெறுதல்.
மனவரைபடம்
தொகுத்தல்
வலசை போதல்
குறித்து விளக்குதல். சத்திமுத்தப்புலவர் பாடலைக்கூறுதல். சிட்டுக்குருவியில் ஆண்
பெண் வேறுபாடு அறிதல் குறித்து விளக்குதல். சிட்டுக்குருவியின் அழிவுக்குக் காரணங்களை அறிதல். பறவையினங்களைக் காப்பாற்ற
நாம் செய்ய வேண்டியவை குறித்து அறிதல். சலீம் அலி குறித்து அறிதல்.
வலுவூட்டல்
பறவையின் சிறப்புகளைக் கூறுதல்.
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற
வாழ்க்கை வரலாற்று நூலைப் பற்றி விளக்குதல்.
சரணாலயங்கள் குறித்து விளக்குதல்.
மதிப்பீடு
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
வலசைப்
பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
நீ
விரும்பும் பறவைகளின் பெயர்களை எழுதுக.
சொற்றொடர்
அமைத்து எழுதுக.
வாழ்நாள்,
செயற்கை.
பறவை
இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.
பறவை
பற்றிய படிப்பு ......................
சலீம்
அலி குறித்து எழுதுக.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 613
வெவ்வேறு வகையான கட்டுரைகளைப் படித்தல்.
தொடர்பணி
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
பறவையின்
பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.
குருவி
என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.