ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 7
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 2
தலைப்பு – இந்திய வனமகன்
பாடத்தின் தன்மை
விரிவானம். இயற்கை – இந்திய வனமகன்
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜாதவ் பயேங் அவர்களின் நேர்காணல்.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், நேர்காணல் முறை.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-indiya-vanamakan-7th-katturai.html
https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_71.html
பாட அறிமுகம்
காட்டின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்களுக்குப் பிடித்த காடுகள்
குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
நேர்காணலை மாணவர்கள் வாசித்தல், உரையாடலின்
பொருளை ஆசிரியர் விளக்குதல்.
கற்றல் திறன்கள்
நேர்காணல்
வடிவத்தில் அளிக்கப்பட்ட கருத்துகளைப் படித்துணரும் திறன் பெறுதல்.
மனவரைபடம்
தொகுத்தல்
பாம்புகள்
இறந்ததைக் கண்டு காடு உருவாக்க நினைத்த ஜாதவ் பயேங் நேர்காணலை விளக்குதல்.
மூங்கில் மரம் வளர்த்து ஜாதுநாத் அவர்களின் கூற்றுப்படி மண்புழுக்கள், சிவப்புக்
கட்டெறும்புகளைத் தீவில் விட்டு மண்தன்மையை மாற்றினார். விதைகளைத் தூவி, பானையில்
துளையிட்டு நீர் ஊற்றி மரங்கள் வளர, பறவைகள், முயல், மான், காட்டு மாடுகள்,
யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலி போன்றன வந்து தங்கிய
நிகழ்வைக் கூறல்.
வலுவூட்டல்
காட்டின் சிறப்புகளை அறிந்து வரல்.
உங்கள்
பகுதிகளில் உள்ள காடுகளின் பெயர்களை அறிதல்.
சரணாலயங்கள்
குறித்து அறிதல்.
மதிப்பீடு
இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர் .....................................
ஜாதவ்
பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
உனக்குப்
பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 707
மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த
தலைப்புகள் அல்லது பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் தருக்கவியல் முடிவுகளை அளித்தல்.
தொடர்பணி
காடுகளின் படங்களைத் திரட்டுதல்.
யானை
குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.
மரக்கன்று
நடுவதன் அவசியத்தைக் கூறு.