எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 2
தலைப்பு – நிலம் பொது
பாடத்தின் தன்மை
உரைநடை உலகம். இயற்கை - பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் கட்டுரையிலிருந்து
சுகுவாமிஷ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு
எழுதிய கடிதம்.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், விளக்க முறை.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/8-2-8th-tamil-worksheet-with-pdf-nilam.html
https://tamilthugal.blogspot.com/2021/04/8th-tamil-urainadai-ulagam-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2021/03/96-land-names-in-tamil.html
பாட அறிமுகம்
பழங்குடியினர் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
இயற்கை
வளங்கள் குறித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.
நிலத்தின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
கடிதம், அதன் பொருளை ஆசிரியர்
வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.
கற்றல் திறன்கள்
இயற்கை வளங்கள்
சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை உணரும் திறன்.
மனவரைபடம்
தொகுத்தல்
நிலம் மிகவும்
புனிதமானது. இயற்கை வளங்கள் அனைத்தும் பழங்குடியினரின் உறவுகள். விலங்குகளை
வேட்டையாடக் கூடாது. நிலத்தை நேசிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
மதிப்பீடு
தொடரில் அமைத்து எழுதுக.
வேடிக்கை,
உடன்பிறந்தார்
நிலத்திற்கும்
செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
நீர்நிலைகள்
குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
நிலவளத்தினைக்
காக்க மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீ கருதுவன யாவை?
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 818
தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு
இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.
தொடர்பணி
நிலம் குறித்து மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய
வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்தல்.