ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 7
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 2
தலைப்பு – விலங்குகள் உலகம்
பாடத்தின் தன்மை
உரைநடை உலகம். இயற்கை - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவர், ஆதினி, மலர்விழி ஆகியோரின் உரையாடல்
வழி காட்டு விலங்குகள் குறித்து அறிதல்.
கற்கும் முறை
வாசித்தல்,
கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், உரையாடல் முறை.
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/7-2-7th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-vilangukal-ulakam-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2020/04/vandalur-zoo-animals-watch-online-camera.html
பாட அறிமுகம்
காட்டின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்களுக்குப் பிடித்த விலங்குகள்
குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.
வாசித்தல்
உரையாடலை மாணவர்கள் வாசித்தல், உரையாடலின்
பொருளை ஆசிரியர் விளக்குதல்.
கற்றல் திறன்கள்
பல்லுயிர்களின்
வாழிடமான காடு குறித்தும் காட்டு விலங்குகள் குறித்தும் புலிகள் காப்பகம் வழி
அறியும் திறன் பெறுதல்.
மனவரைபடம்
தொகுத்தல்
யானைகளின் வகைகள்,
தந்த அமைப்பு, உணவு, நீர், பண்புகள் பற்றியும், கரடி ஓர் அனைத்துண்ணி என்பதையும்
அதன் உணவுகள் குறித்தும், எடை 160 கிலோ என்பதையும் அறிதல். புலி குறித்த
தகவல்களையும் புலி பண்புள்ள விலங்கு என்பதையும் அதற்கான காரணங்களையும் அறிதல்.
மான்களின் வகைகள் குறித்தும் அதன் அழகையும் உணர்தல்.
வலுவூட்டல்
காட்டின் சிறப்புகளை அறிந்து வரல்.
உங்கள்
பகுதிகளில் உள்ள விலங்குகளின் பெயர்களை அறிதல்.
சரணாலயங்கள்
குறித்து அறிதல்.
மதிப்பீடு
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
காடுகளை
அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
மானின்
வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
கரடிகளைத்
தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ....................
உனக்குப்
பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.
குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவு
எண் – 704
தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள்
எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின்மூலம் தங்களின் புரிதலை
மேம்படுத்துதல்.
தொடர்பணி
காட்டுவிலங்குகளின் படங்களைத் திரட்டுதல்.
ஏதேனும்
ஒரு விலங்கு குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.
விலங்குகள்
தொடர்பான பழமொழிகளைத் திரட்டுதல்.