கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, July 05, 2022

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு எழுத்துகளின் பிறப்பு 8th model notes of lesson tamil tamil eluthugalin pirappu unit 1

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 8

பாடம் – தமிழ்

இயல் 1

தலைப்பு – எழுத்துகளின் பிறப்பு

1.கற்றல் விளைவு

          சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலிக்கும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறு என்பதை உணர்தல்.

3.முன்னறிவு

          மெய்யெழுத்துகளின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          குறில் நெடில் எழுத்துகளை மாணவர்கள் ஒலிக்கச் செய்தல்.

4.விதைநெல்

          பிறப்பு – எழுத்துகளின் இடப்பிறப்பு – எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு – உயிர் எழுத்துகள் – மெய் எழுத்துகள் - சார்பெழுத்துகள்.

5.விதைத்தல்

          பிறப்பின் வகைகள், எழுத்துகளின் இடப்பிறப்பு கழுத்து, மார்பு, மூக்கு, தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள், உயிர் எழுத்துகளின் முயற்சிப்பிறப்பு, மெய் எழுத்துகளின் முயற்சிப் பிறப்புகள், இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          எழுத்துகளின் பிறப்பு குறித்த முறைகளை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு


7.கருத்துத்தூவானம்

          தமிழில் ஒரு பத்தியை நிறுத்தி நிதானமாக உச்சரிக்கச் செய்தல்.

          எழுத்துகளின் பிறப்பு குறித்த நூற்பாக்களை அறிந்து வரல்.

8.விளைச்சல்

          ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

          மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

          வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் .......................

9.சங்கிலிப்பிணைப்பு

          உன் பெயரிலுள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.

          ல, ள, ழ, ர, ற, ன, ண, ந – இவ்வெழுத்துகளை உச்சரித்துப் பழகுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive