ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
16-08-2022 முதல்
18-08-2022
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
புலி தங்கிய குகை, பாஞ்சை வளம்
6.பக்கஎண்
52-57
7.கற்றல் விளைவுகள்
705 – தாங்கள்
வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றிக்
கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்.
8.திறன்கள்
சங்க இலக்கியப் பாடல் மூலம் நாட்டுப்பற்றை
அறியும் திறன்
நாட்டுப்புறக் கதைகள் மூலம் தமிழர் வீரத்தை அறியும்
திறன்
9.நுண்திறன்கள்
புறநானூற்றுப் பாடலின் மையக்கருத்து
வெளிப்படும் வகையில் உணர்ச்சியுடன் வாய்விட்டுப்படிக்கும் திறன்.
கதைப்பாடல் பகுதியைப் படித்து நயங்களை அறியும்
திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_43.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-puli-thankiya-kukai.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-paanjai-valam-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
சங்க இலக்கியப் பாடல் வகைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறக்கதைகளைக்
கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர்களின் பழங்கால போர்க்கள வீரத்தைக் கூறி
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கட்டபொம்மனின் வீரத்தைக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
சங்க இலக்கியங்களை அறியச் செய்தல்.
பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தை அறிதல்.
தமிழரின்
வீரத்தை உணரச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – யாண்டு என்னும் சொல்லின் பொருள்
..............................
மெத்தைவீடு
என்று குறிப்பிடப்படுவது ....................................
MOT
– தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
HOT – கட்டபொம்மன் பெரிதும்
புகழப்படக் காரணமாக நீ எண்ணுபவற்றை
எழுதுக.
தாய்
தன் மகனைப் புலியோடு ஒப்பிடுவது குறித்து உனது கருத்துகளை
எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
கட்டபொம்மன் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.