கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 09, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 பருவம் 1 அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம் 6th model notes of lesson tamil term 1 unit 3

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-08-2022 முதல் 18-08-2022

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

எந்திர உலகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம்

6.பக்கஎண்

52-57

7.கற்றல் விளைவுகள்

614 – புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

அறிவியல் அறியும் திறன்

விண்வெளி அறியும் திறன்

9.நுண்திறன்கள்

எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலும் திறன்.

அறிவியல் மனப்பான்மை பெறும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-6th-tamil-ariviyal-aathisoodi.html

https://tamilthugal.blogspot.com/2022/06/nellai-sumuthu.html

https://tamilthugal.blogspot.com/2020/07/avvaiyaar-in-aaththisoodi-eliy.html

https://tamilthugal.blogspot.com/2020/07/barathiyar-in-puthiya-aat.html

https://tamilthugal.blogspot.com/2020/07/barathidasan-in-ilaiya.html

11.ஆயத்தப்படுத்துதல்

ஔவையாரின் ஆத்திசூடி குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த நவீன தகவல் தொழில்நுட்பங்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அறிவியலின் அவசியத்தைக் கூறி அறிவியல் ஆத்திசூடியை அறிமுகப்படுத்துதல்.

அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகளைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அகர வரிசையில் அறிவியல் கருத்துகளை மாணவர்களுக்கு விளக்குதல்.

          ஆத்திசூடியை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.

          மனிதனின் விண்வெளி ஆய்வு குறித்து விளக்கி மாணவர்கள் கருத்தைக் கூறச்செய்தல். புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை ஊக்குவித்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அறிவியல் சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். புதிய கண்டுபிடிப்புகளின் தேவையையும் பழைமையின் அவசியத்தையும் அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – ஔடதம் என்பதன் பொருள் ..............................

                   மனிதன் எப்போதும் உண்மையையே ....................................

          MOT – நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

                   மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

          HOT – உனக்குத்தெரிந்த மருத்துவமுறைகள் குறித்து எழுதுக.

                   எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று சிந்தித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த அறிவியல் சாதனங்கள் 5 எழுதுக.

விண்வெளி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.





தமிழ்த்துகள்

Blog Archive