கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, January 07, 2023

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பயிற்சித் தேர்வு 2023 விடைக்குறிப்பு 10th tamil public model question answer key

 

தமிழகத் தமிழாசிரியர் கழகம்

தமிழ்ப் பயிற்சித் தேர்வு 2022 - 2023

பத்தாம் வகுப்பு

தமிழ்

விடைக் குறிப்பு

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும்                     15x1=15

1.     ஈ.சிலப்பதிகாரம்

2.    இ.அன்மொழித்தொகை

3.    ஈ.சிற்றூர்

4.    இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

5.    ஈ.மன்னன், இறைவன்

6.    இ.உருவகம்

7.    அ.கூவிளம் தேமா மலர்

8.    ஈ.இலா

9.    இ.இடையறாது அறப்பணி செய்தலை

10.  ஆ.விண்மீன்

11.   இ.வாரும் + தாமரை

12.  அ.தமிழழகனார்

13.  ஈ.தனிப்பாடல் திரட்டு

14.  ஆ.முத்தமிழ் - மெத்த

15.  இ.கற்பது

 

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்க                             4x2=8

16.  முகமன் சொற்கள் – வாருங்கள், அமருங்கள், சாப்பிடுங்கள், நலமா.

 

17.  இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

 

18.  உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.

 

19.  கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றி செய்கிறார்.

 

20. தமிழ்த் தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர் யார்?

பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மனமார்ந்த கலைகளில் ஒன்று எது?

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

21.  பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

கட்டாய வினா

 

எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்க                             5x2=10

22. நம்பிக்கை, சின்னம்

23. ஒலி + த் + த் +

ஒலி - பகுதி

த் - சந்தி

த் - இறந்த கால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி

 

24. வேங்கை – மரம், புலி - தனி மொழி

வேம் + கை – வேகின்ற கை - தொடர் மொழி

தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளதால் வேங்கை பொது மொழி.

 

25. வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது,

விதியை மாற்ற இயலாது என்று வீதியில் விழுந்தவர் கூறினார்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

26. அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தாள்.

 

27. தோற்பவை, தோற்பாவை

 

28. என்னிடம் பணம் இல்லாமல் இருக்கிறது.

இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளிக்க                             2x3=6

29. அ.போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.

ஆ.தம்மை விட வலிமை குறைந்தாரோடு

இ.போரின் கொடுமையில் இருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்.

 

30. இடம் - மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை - மாநகராட்சி சிறப்புக் கூட்டம்.

பொருள் - மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை என்று நீதிபதி வாஞ்சி தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் - இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

 

31.  மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பம்

மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய

கட்டுரை எழுதும் மென்பொருள்கள்

கவிதை பாடும் எந்திரங்கள்

ஆளில்லாமல் நடத்தப்படும் வணிகக் கடைகள்

 

எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளிக்க                             2x3=6

32. பூக்கையைக் குவித்து வாய்மையே மழை நீர் ஆகி கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாடியது

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப்புண் போல் பிரிந்தன என்று உருகி இருக்கிறார் வீரமாமுனிவர்

இப்புலம்பல் கேட்டு தேன் மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மலர்களும் சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அழுவன போன்று கூச்சலிட்டன என்பது கவிதாஞ்சலியின் உச்சம்.

 

33. இளைப்பாறிச் செல்லுங்கள்

நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்

உரிமையுடன் நுழையுங்கள்

மாமிசத்தின் பொரியலையும் தினைச்சொற்றையும் பெறுவீர்கள்

 

34. பெருமாள் திருமொழி

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.                     - குலசேகராழ்வார்.

அல்லது

காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!                           - கண்ணதாசன்.

 

எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளிக்க                             2x3=6

35. கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்

மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்

மாமழை - உரிச்சொல் தொடர்

பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி - அடுக்குத்தொடர்

எவையேனும் மூன்று எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

 

36. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தன் குறிப்பு ஏற்ற அணி

சான்று – போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட

விளக்கம் - கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வர வேண்டாம் என தடுப்பது போல கைகாட்டியது.

கொடிகள் காற்றில் அசைவது இயற்கை, ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையை அசைத்து இம் மதுரைக்கு வர வேண்டாம் என்று தெரிவிப்பது போல் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறியுள்ளதால் இது தற்குறிப்பேற்ற அணி.

 

37. சீர்                         அசை                              வாய்ப்பாடு

அரியவற்றுள்                    நிரை நிரை நேர்      கருவிளங்காய்

எல்லாம்                 நேர் நேர்                 தேமா

அரிதே                   நிரை நேர்               புளிமா

பெரியாரைப்            நிரை நேர் நேர்        புளிமாங்காய்

பேணித்                  நேர் நேர்                 தேமா

தமராக்                   நிரை நேர்             புளிமா

கொளல்                 நிரை                     மலர்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                          5x5=25

 

38. அ.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

தானியக் கடைத் தெருக்கள்

நேரடி வணிகம்

இலாப நோக்கமற்றது

கலப்படம் இல்லாதது

தரம் உண்டு விலை குறைவு

இக்கால வணிக வளாகங்கள்

தனித் தனி அங்காடிகள்

இடைத்தரகர்கள் அதிகம்

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் உள்ளது

விலை அதிகம்

அல்லது

ஆ.

மன்னன் இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தார்

மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

இறைவனும் இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியோடு வைகை ஆற்றில் தென்புறத்தே அடைந்தார்

மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு தன் பிழையைப் பொறுத்தருள வேண்டினான்

மன்னன் புலவருக்குச் சிறப்பு செய்து, மன்னிப்பு கேட்டார்

 

39. அ.

தலைப்பு

அனுப்புநர்

பெறுநர்

விளி

பொருள்

இப்படிக்கு

இடம், நாள்

உறைமேல் முகவரி

அல்லது

ஆ.

தலைப்பு

ஊர், நாள்

விளி

பொருள்

இப்படிக்கு

உறைமேல்முகவரி

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

40. கவிதை

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

41.  படிவம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

42. அ.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ. சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக் கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக் கருதப்பட்டது.

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                          3x8=24

43.  அ.உறவினருக்குச் செய்த விருந்தோம்பல்

அல்லது

ஆ.நான்கு அறங்கள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

44. அ.புதிய நம்பிக்கை

அல்லது

ஆ.ஒருவன் இருக்கிறான்

முன்னுரை,

உட்தலைப்புகள்,

கதைப்பொருத்தம்,

முடிவுரை.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

45. அ.சான்றோர் வளர்த்த தமிழ்

அல்லது

ஆ.நாட்டுநலப்பணித்திட்ட தொடக்கவிழா வாழ்த்துரை

முன்னுரை,

உட்தலைப்புகள்,

பொருளுரை,

மேற்கோள்கள்,

முடிவுரை.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

Blog Archive