விருதுநகர்
மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பத்தாம்
வகுப்பு தமிழ்
ஆயத்தத்தேர்வு
2 சனவரி 2023
விடைக்குறிப்பு
I 8x1=8
1.
இ.உருவகம்
2.
இ.இடையறாது அறப்பணி
செய்தலை
3.
அ.திருப்பதியும்
திருத்தணியும்
4.
ஆ நாக்கு
5.
ஈ.நெறியோடு நின்று
காவல் காப்பவர்
6.
ஆ.அதியன்,
பெருஞ்சாத்தன்
7.
ஆ.பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
8.
ஆ கொடிவகை
II 2x2=4
9. ம.பொ.சி.யிடம்
நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச்
சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை
வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.
இவற்றால் வறுமையிலும் படிப்பின்மீது ம.பொ.சி கொண்ட
நாட்டத்தை அறியலாம்.
10.
பணம்,
பதவிகளால் தலைக்கனம் பிடித்தவர் உலகில் பலர் உண்டு.
அன்றாட
வாழ்வை நடத்துவதற்காகவே செங்கற்களைச் சுமந்து வேலை செய்யும் சித்தாளுக்குத்
தலைக்கனமே வாழ்வாகிப் போனது எனக் கவிஞர்
நாகூர் ரூமி கூறியுள்ளார்.
11.
4 செப்பல், அகவல்,
துள்ளல், தூங்கல்
III 3x2=6
12.
மூன்று + தமிழ் – ௩ ஆறு + சுவை – ௬
13. குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம்
அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
முதலடி நான்கு சீராகவும் (அளவடி)
இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.
எ.கா - முயற்சி திருவினை
ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
14.
பண்பாட்டு எல்லை,
மறுமலர்ச்சி
15.
கண்ணும் கருத்தும் –
ஒரு
வேலையைச் செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும்.
அள்ளி
இறைத்தல் –
பணத்தை
அள்ளி இறைத்ததால் அவன் வறுமையில்
சிக்கினான்.
IV 3x3=9
16.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
நானும் என் நண்பர்களும் எங்கள் ஊரில் உள்ள அரண்மனையைச்
சுத்தமாக வைக்க எண்ணினோம் . வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச்
சுத்தம் செய்தோம். சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம்
கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம் .
கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள்
அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம். கட்டைத்தூரிகையை
வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.
18.
சீர் |
அசை |
வாய்பாடு |
அற/னீ/னும் |
நிரை நேர் நேர் |
புளிமாங்காய் |
இன்/பமும் |
நேர் நிரை |
கூவிளம் |
ஈ/னும் |
நேர் நேர் |
தேமா |
திற/னறிந்/து |
நிரை நிரை நேர் |
கருவிளங்காய் |
தீ/தின்/றி |
நேர் நேர் நேர் |
தேமாங்காய் |
வந்/த |
நேர் நேர் |
தேமா |
பொருள் |
நிரை |
மலர் |
19.
கட்டாய வினா
சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; -
இளங்கோவடிகள்.
V 3x5=15
20.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
21.
அ.சங்ககாலத்தில்
தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி
வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக் கொண்டிருந்தது.
உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை,
மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இத்தகைய இயற்கைக் கூறுகளின்
மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக் கருதப்பட்டது.
ஆ
. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
22.
அ, ஆ. பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
VI 1x8=8
23.
அ, ஆ. பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்