கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, January 27, 2023

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil பிப்ரவரி 6

  நாள் - 06-02-2023

பாடம் - தமிழ்

திருப்புதல் வினாக்கள்


விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் யாவை?

செயல் – என முடியும் திருக்குறளை எழுதுக.

பாடாண்திணையை விளக்குக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

வள்ளுவம்சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -  இடஞ்சுட்டிப் பொருள் தருக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர். – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ் - கட்டுரை எழுதுக.

நிகழ் கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் -அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

தன்மையணியை விளக்குக.


தமிழ்த்துகள்

Blog Archive