ஏழாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
30-01-2023 முதல் 03-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
புதுமை விளக்கு,
அறம் என்னும் கதிர்
6.பக்கஎண்
22 - 26
7.கற்றல் விளைவுகள்
T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும், பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள்
போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.
8.திறன்கள்
பாடலின் பொருள்
அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
அறநெறிச்சாரப்
பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.
9.நுண்திறன்கள்
வழிபாடு
குறித்து அறிதல். அறநெறிகளை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டு அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_22.html
https://tamilthugal.blogspot.com/2020/01/puthumai-vilakku.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-puthumai-vilakku-7th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-aram-ennum-kathir-7th-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
வழிபாடு பற்றிக்
கூறச்செய்தல்.
உழவுத்தொழில் குறித்து
அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உருவகம் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் வழிபாடு குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து
விளக்குதல்.
உருவகம் குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து
அறியச் செய்தல். இளமையில் கற்கும் இன்றியமையாமை குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அழகான நயங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை
வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – களை என்பதன் பொருள் ...............................
MOT
– பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
HOT – நீங்கள் விளக்காக உருவகப்படுத்துபவை பற்றி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்திய இன்சொற்களைத்
தொகுத்துக் கூறுக.