பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
சிலப்பதிகாரம் குறித்து நீ அறிந்த தகவல்களைக் கூறுக.
பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்கு பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
தீவக அணியின் வகைகள் யாவை?
அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அறத்தில் வணிக நோக்கு கூடாது என்பதை புறநானூறு வழி விளக்குக.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
தண்டலை எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.