ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
06-02-2023 முதல் 10-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
ஒப்புரவு நெறி
6.பக்கஎண்
27 - 31
7.கற்றல் விளைவுகள்
T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.
8.திறன்கள்
ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்தும் திறன்.
9.நுண்திறன்கள்
ஒப்புரவு குறித்து அறிதல். கூடி வாழ்தலை அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_27.html
https://tamilthugal.blogspot.com/2021/02/2-3-oppuravu-neri-7th-tamil-kuru-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.
அறநெறியில் வாழ்தல் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உதவி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
வாழ்வின் குறிக்கோள், வாழ்வும் ஒப்புரவும், ஒப்புரவின் இயல்பு, பொருள் ஈட்டலும் ஒப்புரவும், ஒப்புரவின் பயன், ஒப்புரவும் கடமையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஒப்புரவு நெறி குறித்து விளக்குதல்.
புறநானூறு, திருக்குறள் பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து அறியச் செய்தல். ஊருணித் தண்ணீர், மருந்து மரம் குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – செல்வத்தின் பயன்............................... வாழ்வு.
MOT – ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
HOT – ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.