6th tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
24-06-2024 முதல் 29-06-2024
2.பருவம்
1
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
தமிழ்த்தேன் –
விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
கனவு பலித்தது,
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
6.பக்கஎண்
15 - 20
7.கற்றல் விளைவுகள்
T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள்,
தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி
எழுதுதல்.
T-617 செய்தித்தாள்கள், இதழ்கள்,
கதைகள் இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள்
போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும்
கருத்துகளையும் வெளிப்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
தன்னம்பிக்கையுடன் தனக்கான இலக்குகளை உருவாக்கும் திறன் பெறுதல்.
எழுத்துகளின் வகை தொகைகளை அறியும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
தமிழில் இயல், இசை, நாடகம் மட்டுமல்ல அறிவியலும் உண்டு. அறிவியல் செய்திகளை
நம் முன்னோர்கள், இலக்கியங்கள் வாயிலாக உணர்தல்.
மொழியை எவ்வாறு
பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்த இலக்கணம் குறித்து உணர்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_76.html
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_2.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_61.html
https://tamilthugal.blogspot.com/2021/08/1-1-6th-taamil-kanavu-palithathu.html
https://tamilthugal.blogspot.com/2021/08/1-1-kanavu-palithathu-6th-katturai.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-worksheet-with-pdf-tamil.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_28.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-ilakkanam-eluthukalin.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-ilakkanam-q.html
11.ஆயத்தப்படுத்துதல்
கடிதம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றை மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மாணவர்கள்
அறிந்த அறிவியல் செய்திகளை எழுதச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த மாத்திரை குறித்த செய்திகளைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஐம்பூதங்கள், ஆறறிவு குறித்து தொல்காப்பியர் கூறுபவை – ஔவையார் பாடலின்
கருத்து – பதிற்றுப்பத்து, நற்றிணையில் உள்ள மருத்துவச் செய்திகள் – கலீலியோவின்
கருத்து கபிலரின் திருவள்ளுவமாலை - இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் தமிழரின் அறிவியல் அறிவையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
இலக்கண வகைகள், உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள், நெடில் எழுத்துகள்,
மாத்திரை, மெய்யெழுத்துகளின் வகைகள், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில், ஆய்த
எழுத்து - இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
இலக்கண வகைகள் குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தன்னம்பிக்கை
தரும் செய்திகளையும் கதைகளையும் மாணவர்களுக்குக் கூறுதல்.
உங்களின்
எதிர்காலக் கனவையும் அதற்கான காரணத்தையும் கூறுக என மாணவர்களிடம் கேட்டல்.
எழுத்துகள், வகைகள், மாத்திரை குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.
குறில்
எழுத்துகளையும் நெடில் எழுத்துகளையும் உச்சரித்துப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – ஐந்து வகை
இலக்கணங்களை எழுதுக.
மெய்
எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு .....................................
MOT
– கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்கு எவ்வாறு பொருந்துகிறது
என்பதனை விளக்குக.
மாத்திரை
என்பது யாது?
HOT – இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
மாணவர்களின் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதி வரச் செய்தல்.
தமிழில்
பயின்ற சாதனையாளர்கள் குறித்த தகவல்களைத் தொகுத்தல்.
உங்கள் பெயருக்கான
மாத்திரை அளவைக் கண்டுபிடி.
ஆய்த
எழுத்து இடம்பெறும் சொற்களைத் தொகுத்தல்.