கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 19, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொற்பூங்கா, எழுத்துகளின் பிறப்பு 8th tamil model notes of lesson

 8th tamil model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

26-06-2023 முதல் 30-06-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ் இன்பம் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

சொற்பூங்கா, எழுத்துகளின் பிறப்பு

6.பக்கஎண்

13 - 19

7.கற்றல் விளைவுகள்

T-809 படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல்.

8.திறன்கள்

          ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்க்கும் திறன் பெறுதல்.

          சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலிக்கும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் பற்றியும் அவற்றிலிருந்து தோன்றி வளரும் புதிய சொற்கள் பற்றியும் உணர்தல்.

          தமிழிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறு என்பதை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-sorpoonka-virivanam-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-sorpoonka.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-qr-code-video-8th-tamil-sorpoonka.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-8th-tamil-worksheet-with-pdf_7.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-1-1.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-eluthugalin-pirappu-8th-tamil-q.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-qr-code-video-8th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-eluthukalin.html

 11.ஆயத்தப்படுத்துதல்

          ஓரெழுத்து ஒரு மொழி குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          குறில் நெடில் எழுத்துகளை மாணவர்கள் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மெய்யெழுத்துகளின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          குறில் நெடில் எழுத்துகளை மாணவர்கள் ஒலிக்கச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

                   தேய்மானம் – உயிரோட்டத்தமிழ் – சொல் – நெல் – தொல்காப்பியர் – நெட்டெழுத்து ஏழு – நன்னூலார் – 42 – யா, மா, ஈ – ஏ, ஏவலன், ஏகலை – எய்ப்பன்றி – எயினர் – எயினியர் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          மொழிப்பற்றை மீட்டெடுத்தல் குறித்தும், மொழிப்பற்றை வளர்ப்பது குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

பிறப்பின் வகைகள், எழுத்துகளின் இடப்பிறப்பு கழுத்து, மார்பு, மூக்கு, தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள், உயிர் எழுத்துகளின் முயற்சிப்பிறப்பு, மெய் எழுத்துகளின் முயற்சிப் பிறப்புகள், இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          எழுத்துகளின் பிறப்பு குறித்த முறைகளை மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அவற்றின் பொருளையும் எழுதிவரச் செய்தல்.

          இளங்குமரனார் குறித்த செய்திகளை அறிந்து வரல்.

          தமிழில் ஒரு பத்தியை நிறுத்தி நிதானமாக உச்சரிக்கச் செய்தல்.

          எழுத்துகளின் பிறப்பு குறித்த நூற்பாக்களை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          LOT மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

          வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் .......................

          MOT தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

                   ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

HOT – தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம்பெறும் தொடர்கள் எழுதுதல்.

          மா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்களைத் தொகுத்தல்.

          உன் பெயரிலுள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.

          ல, ள, ழ, ர, ற, ன, ண, ந – இவ்வெழுத்துகளை உச்சரித்துப் பழகுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive