பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
19-06-2023 முதல் 23-06-2023
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுத ஊற்று – உரைநடை
உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழ்ச்சொல் வளம்
6.பக்கஎண்
4 - 8
7.கற்றல் விளைவுகள்
T-1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட
சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.
8.திறன்கள்
தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழ்ச் சொல் வளங்கள்
குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamilcholvalam-one-word.html
https://tamilthugal.blogspot.com/2021/12/1-10th-tamil-online-test-with.html
https://tamilthugal.blogspot.com/2022/04/tamilchol-valam-tenth-tamil-nedu-vina-q.html
https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2021/03/thaavara-ilaikalin-peyarkal-tamilil.html
https://tamilthugal.blogspot.com/2021/03/thavara-adippakuthi-10th-tamilcholvalam.html
https://tamilthugal.blogspot.com/2020/05/6-poovin-paruvangal-sixth-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த பூவின் பருவங்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாவாணர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தமிழ்ச்சொல் வளத்தை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ்ச்சொல் வளம்
பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
அடிவகை, கிளைப்பிரிவுகள், காய்ந்த அடி,
கிளை, இலை வகை, கொழுந்து வகை, பூவின் நிலைகள், பிஞ்சு, குலை, கெட்டுப்போன காய்கனி,
பழத்தோல், மணி, இளம் பயிர் வகைகள் குறித்து விளக்குதல். தமிழ்ச்சொல் வளங்கள்
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாவாணர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அலைபேசி, செயலிகளின் தமிழ்ச்சொற்களை அறியச் செய்தல்.
தமிழ்ச்
சொற்களின் சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
LOT – பூவின் நிலைகளைக்
குறிக்கும் சொற்களை எழுதுக.
MOT
– ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
HOT – தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பிறதுறைகளின்
தமிழ்ச் சொல் வளங்களைத் தொகுத்தல்.
தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.