கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 19, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொலவடைகள், குற்றியலுகரம், குற்றியலிகரம்

7th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

24-06-2024 முதல் 29-06-2024

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதத் தமிழ் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

சொலவடைகள், குற்றியலுகரம், குற்றியலிகரம்

6.பக்கஎண்

14 - 20

7.கற்றல் விளைவுகள்

T-712 பல்வேறு வகைப் படித்தலுக்கான பல்வேறு சொற்கள் , சொற்றொடர்கள் , சொலவடைகள் ஆகியனவற்றையும் புரிந்துகொண்டு நயம் பாராட்டப்பட்டது.

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் அவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

          சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறியும் திறன் பெறுதல்.

          குற்றியலுகர, குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறியும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும் பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை உணர்தல்.

குற்றியலுகரம், குற்றியலிகரச் சொற்களை உதாரணங்களுடன் உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்



https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_16.html

https://tamilthugal.blogspot.com/ 2021/07/ solavadaikal- 7 th-virivaanam.html

https://tamilthugal.blogspot.com/ 2021/11/1-7 th-tamil-virivanam-solavadaikal- 1. html

https://tamilthugal.blogspot.com/ 2021/07/7 th-tamil-solavadaikal-virivaanam.html

https://tamilthugal.blogspot.com/ 2019/07/7- qr-code-video_ 27. html

https://tamilthugal.blogspot.com/ 2022/06/1-1-7 th-tamil-mindmap-term- 1- அலகு- 1 _ 86. html

https://tamilthugal.blogspot.com/ 2021/11/2-7 th-tamil-virivanam-solavadaikal- 2. html

https://tamilthugal.blogspot.com/ 2021/07/7-7 th-tamil-ilakkanam-worksheet-with.html

https://tamilthugal.blogspot.com/ 2021/07/1-7 th-ilakkanam-kutrialukaram-question.html

https://tamilthugal.blogspot.com/ 2020/06/7-1-1- குற்றியலுகரம்-kutriyaligaram.html

https://tamilthugal.blogspot.com/ 2019/07/7- qr-code-video_ 0. html

https://tamilthugal.blogspot.com/ 2018/05/ blog-post_ 29. html

https://tamilthugal.blogspot.com/ 2022/06/1-1-7 th-tamil-mindmap-term- 1- அலகு- 1 _ 28. html

11.ஆயத்தப்படுத்துதல்

          அறிந்த சொலவடைகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          சார்பெழுத்துகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பொம்மலாட்டம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

மாத்திரை அளவு குறித்து மாணவர்களிடம் வினவுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பள்ளி செல்ல மறுத்த பையன் விளையாட வர்றியா? என எறும்பு, தேனீ, மாடு, ஆமை, முயல், குட்டிச்சுவரு என அனைவரிடமும் வினவி அனைவரும் தங்களுக்கு வேலை இருப்பதாகக் கூற குட்டிச்சுவரு இடிஞ்சு விழ பூச்சி, எறும்பு, வண்டு கடிக்க மீண்டும் பள்ளி செல்கிறேன் எனக் கூறிய பையனின் கதையை மாணவர்களுக்கு விளக்குதல்.

          அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது, வெளச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப்பகை, எறும்பு ஊரக் கல்லும் தேயும், உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும், அடைமழை விட்டாலும் செடிமழை விடாது, நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம், ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும், அதிர அடிச்சா உதிர விளையும், அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம், அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் போன்ற சொலவடைகளை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலிகரம் இவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

          ஆறுவகையான குற்றியலுகரங்களுக்கும் எடுத்துக்காட்டுகளை அறிதல். காது – நெடில் தொடர்க் குற்றியலுகரம், எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், வரலாறு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், பாக்கு - வன்தொடர்க் குற்றியலுகரம், பந்து - மென்தொடர்க் குற்றியலுகரம், மார்பு - இடைத்தொடர்க் குற்றியலுகரம் இவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நாம் பயன்படுத்தும் சொலவடைகளை எழுதச் செய்தல்.

          சொலவடைகளுடன் கூடிய பொம்மலாட்டக் கதையைக் கூறி, வாசித்துப் பழகுதல்.

நாம் பயன்படுத்தும் கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பற்றி அறிதல்.

          குற்றியலுகர, குற்றியலிகரச் சொற்களை வாசித்துப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT குற்றியலிகரம் என்றால் என்ன?

          MOT – பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.

                   குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

HOT சொலவடைகள் தோன்ற என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

          உனக்குப் பிடித்த சொலவடையைத் தொடரில் அமைத்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீதிற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பொம்மலாட்டக் கதைகளைக் கேட்டல்.

          உங்கள் பகுதியில் வழங்கப்படும் சொலவடைகளைத் தொகுத்தல்.

          கு, சு, டு, து, பு, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுதல்.

          குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive