6th Tamil Model Notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
18-06-2024 முதல் 21-06-2024
2.பருவம்
1
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
தமிழ்த்தேன் –
கவிதைப்பேழை, உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழ்க்கும்மி,
வளர்தமிழ்
6.பக்கஎண்
5 - 14
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய
ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை
வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப்
புரிந்துகொள்ள முயலுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்து போற்றும் திறன் பெறுதல்.
தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி தமிழின் பெருமையை உணர்தல்.
உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_7.html
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_69.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-worksheet-with-pdf-tamilkummi.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_3.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-tamilkummi-term-1-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_11.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_28.html
https://tamilthugal.blogspot.com/2021/07/valar-tamil-6th-tamil-prose.html
https://tamilthugal.blogspot.com/2018/06/valartamil.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-valar-tamil-term-1.html
https://tamilthugal.blogspot.com/2021/06/tamil-numbers-live-worksheet.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1_21.html
11.ஆயத்தப்படுத்துதல்
கும்மி குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
பூவின் பருவ நிலைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பெருஞ்சித்திரனார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
மாணவர்கள்
அறிந்த தமிழ் எண்களை எழுதச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ்
நூறாண்டுகளைக் கண்டது, நூல்கள் பல கொண்டது. மாற்றத்தால் அழியாமல் நிலைத்திருக்கும்
மொழி. பொய்யை அகற்றும், அறியாமை நீக்கும், இன்பம் தரும், உண்மை ஊட்டும், அறம்
தரும், உலகம் சிறக்க வழி காட்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
மொழிகள்,
செம்மொழிகள், பாரதியார் பாடல்வரி, தொல்காப்பியம், வலஞ்சுழி எழுத்துகள், அல்திணை,
பாகுஅல்காய், இலக்கிய, இலக்கண வளம், ஒரு சொல் பல பொருள், முத்தமிழ், கணினித் தமிழ்
புதிய கலைச்சொற்கள்- இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்க்கும்மி பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின்
சிறப்புகளை அறிந்து வரல்.
இணையத் தமிழ் குறித்த செய்திகளை எழுதி வரச் செய்தல்.
கவிஞர்
அறிவுமதி அவர்கள் எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு பிறந்தநாள்
வாழ்த்து கூறும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.
15.மதிப்பீடு
LOT – தமிழ் மொழியின்
செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
பாவலரேறு
என அழைக்கப்படுபவர் யார்?
மா என்னும் சொல்லின் பொருள் ....................
MOT
– பொருள் கூறுக.
மேதினி,
ஊழி, ஆழிப்பெருக்கு.
தமிழ்மொழி
எவ்வாறு அறியாமையை அகற்றும்?
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
HOT – தமிழ்க்கும்மி பாடலின்வழி நீ அறிந்தவற்றை உன் சொந்த நடையில் எழுதுக.
தமிழ்மொழி
வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்புகளை அறிதல்.
தமிழின்
பெருமைகளைத் தொகுத்தல்.
மாணவர்களின் வயதைத் தமிழ் எண்களில் எழுதி வரச் செய்தல்.
திறன்பேசியில்
உள்ள செயலிகளுக்குத் தமிழ்ச்சொல் அறிந்து வரல்.