9th model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
18-06-2024 முதல் 21-06-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று பேர் –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
தமிழோவியம்,
தமிழ்விடு தூது
6.பக்கஎண்
8 - 12
7.கற்றல் விளைவுகள்
T-9002 வேறுபட்ட கவிதை வடிவங்களைப்
படித்துப் பொருளுணர்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும்
உத்திகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழின் பெருமைகள்
குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1_50.html
https://tamilthugal.blogspot.com/2024/06/1_42.html
https://tamilthugal.blogspot.com/2018/07/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamiloviyam.html
https://tamilthugal.blogspot.com/2021/07/9th-tamil-seyyul-thamiloviyam.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamilvidu.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஈரோடு தமிழன்பன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தூது பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழோவியம்,
தமிழ்விடு தூது பாடலின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தமிழின் குணம்,
வண்ணங்கள், சுவைகள், அழகுகள் குறித்து அறியச் செய்தல்.
கண்ணி, சிற்றிலக்கியம், கவிதைகள்
குறித்து விளக்குதல். தாய்மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். தமிழன்பன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின்
சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
LOT – கண்ணி என்பதன்
விளக்கம் யாது?
MOT
– காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
HOT – தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழின்
பெருமைகளைத் தொகுத்தல்.
தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.