கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, June 10, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்மொழி மரபு, தமிழ் வரிவடிவ வளர்ச்சி

 8th notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

18-06-2024 முதல் 21-06-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ் இன்பம் – கவிதைப்பேழை, உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்மொழி மரபு, தமிழ் வரிவடிவ வளர்ச்சி

6.பக்கஎண்

5 - 12

7.கற்றல் விளைவுகள்

T-803 படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்.

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)

8.கற்றல் நோக்கங்கள்

          தமிழ்மொழியின் மரபுகளை அறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல்.

          தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறியும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வரும் மரபு அறிதல். செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் தொல்காப்பியம் வழி உணர்தல்.

          தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/1_7.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_11.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-8th-tamil-worksheet-with-pdf.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-tamilmoli_11.html

https://tamilthugal.blogspot.com/2021/04/1-tamil-8th-kuruvina-tamil-mozhi-marabu.html

https://tamilthugal.blogspot.com/2022/05/tholkappiyar.html

https://tamilthugal.blogspot.com/2021/01/paal-tamil-ilakkanam-grammar-fourth.html

https://tamilthugal.blogspot.com/2018/05/thinai.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-8th-tamil-worksheet-with-pdf-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/04/1-tamil-varivadiva-valarchi-8th-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-varivadiva-valarchi.html

 11.ஆயத்தப்படுத்துதல்

          ஐம்பூதங்கள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          இருதிணை, ஐம்பால் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.

          எழுத்துகளின் தோற்றம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தொல்காப்பியரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

          பெரியாரைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களால் இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இருதிணை, ஐம்பால் குறித்து விளக்குதல்.

மரபு மாறினால் பொருள் மாறிவிடும் என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          ஓவிய எழுத்து, ஒலி எழுத்து நிலை, அச்சுக்கலை, வட்டெழுத்து, தமிழெழுத்து, கண்ணெழுத்து, துணைக்கால், இணைக்கொம்பு, புதிய வரிவடிவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்தும், கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி தமிழ் என்பது குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பறவைகள், விலங்குகளின் ஒலிமரபுகளை அறிந்து வரல். அளபெடை குறித்து அறிமுகம் செய்தல்.

          தமிழ்மொழியின் பழைய வரிவடிவச் சொற்களை எழுதிவரச் செய்தல்.

          கல்வெட்டுச் செய்திகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          LOT உலகம் எவற்றால் ஆனது?

                   செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

                    தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் .........................

          MOT தொல்காப்பியம் குறித்து விளக்குக.

                   பொருள் கூறுக.

                   விசும்பு, மரபு, திரிதல், தழாஅல்.

                    ஓவிய எழுத்து என்றால் என்ன?

          HOT நம் முன்னோர் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

          தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          விலங்குகளின் இளமைப் பெயர்களை அறிதல்.

தொல்காப்பியம் குறித்து இணையம் மூலம் அறிதல்.

பெரியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          தமிழின் கல்வெட்டு எழுத்துகளைத் தொகுத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive