9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
24-06-2024 முதல்
29-06-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று பேர் –
விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
வளரும் செல்வம்,
தொடர் இலக்கணம்
6.பக்கஎண்
13 - 22
7.கற்றல் விளைவுகள்
T-903 தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி
அறிதல்.
T-904 தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சொற்கள் புலப்படுத்தும் வரலாறு, பண்பாடு
ஆகியவற்றை அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழின்
கலைச்சொல்லாக்கம் குறித்து அறிதல்.
தன்வினை, பிறவினை
பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/09/valarum-selvam.html
https://tamilthugal.blogspot.com/2020/08/9-1-9th-tamil-virivaanam-val.html
https://tamilthugal.blogspot.com/2023/06/1-9th-tamil-mind-map-thodar-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-thodar.html
https://tamilthugal.blogspot.com/2021/07/9-9th-tamil-grammar-thanvinai-piravinai.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-1.html
https://tamilthugal.blogspot.com/2020/02/pagupatha-uruppilakkanam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
உரையாடல் மூலம் கலைச் சொற்களை அறிவதை உரைத்தல்.
வினை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வளரும் செல்வம்
விரிவானத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். எண் அளவு தமிழ்ச் சொற்கள்,
கடல் துறை சொற்கள் குறித்து அறியச் செய்தல்.
மொழிபெயர்ப்பு குறித்து விளக்குதல்.
தாய்மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
எழுவாய்,
பயனிலை, தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, பகுபத உறுப்பிலக்கணம்
குறித்து விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ் எண்களை மாணவர்களை அறியச் செய்தல்.
பெயரடைகளை
அறிந்து கொளல்.
15.மதிப்பீடு
LOT – செய்வினையைச்
செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
MOT
– வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்
சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக
HOT – தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன்
வேறுபடுத்திக் காட்டுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பிறமொழிச்
சொற்களுக்கான தமிழ்ச்சொற்களைத் தொகுத்தல்.
பகுபதம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.