கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 26, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓடை, கோணக்காத்துப்பாட்டு 8th tamil model notes of lesson

8th tamil model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

01-07-2024 முதல் 05-07-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஓடை, கோணக்காத்துப்பாட்டு

6.பக்கஎண்

24 - 29

7.கற்றல் விளைவுகள்

T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிப் பேசுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

          பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்.

          நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

          ஓடையின் வருணனையை அறிதல்.

          இயற்கைச் சீற்றத்தின் அழிவை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

        https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-odai.html

        https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-konakathupaattu.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf-odai.html

          https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/2-odai-8th-tamil-kuruvina-vidai.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/konakathu-pattu-8th-tamil-seyyul.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/2-konakathupattu-tamil-kuruvina-vidai.html

 11.ஆயத்தப்படுத்துதல்

          நீர்நிலைகளின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

இயற்கைச் சீற்றங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          ஓடையைப் பார்த்தவர்கள், அதில் குளித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.

          புயலால் ஏற்படும் துன்பங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்வது, சலசல என ஒலி எழுப்ப ஓடை எங்கு கற்றது, வருணிக்க இயலாத அழகு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          பயிர்களைச் செழிக்கச் செய்வது, உணவு தந்து வறுமை போக்குவது, கரை மோதுவது, புற்களுக்கு இன்பம் சேர்ப்பது, இரக்கம் இல்லாதவர் நாண உழைப்பைக் கொடையாகத் தருவது பெண்களின் வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புவது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          புயல் காற்றின் அழிவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். புயலால் கூரைகள் சரிந்தன, தென்னம்பிள்ளைகள் வீணாயின, பருத்திச்செடிகள் சிதைந்தன, மாடி வீடுகள் விழுந்தன, மரங்கள் ஒடிந்தன, கப்பல் கவிழ்ந்தது, மக்கள் தடுமாறினர், ஆடு மாடுகள் இறந்தன, சித்தர்களின் கொல்லிமலையைச் சுற்றி புயல் அடித்தது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

        



மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நீர் நிலைகளின் இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

          மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.

          விழிப்புணர்வுடன் இருக்கும் எண்ணத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          LOT கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

                   ஓடையின் பயன்கள் யாவை?

          MOT – பொருள் கூறுக.

                   ஈரம், நாணம், முழவு, புன்செய், சேகரம், வாகு, காலன், மெத்த

                   கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

          HOT இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

          நீ அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கைக் காட்சி ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி மகிழுதல்.

          இயற்கையின் இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.

          இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுதல் என திட்டமிடல்.

          மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive